பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 4. I பாரியைப் போரில் வென்றுவிடத் துணிந்தனர். அவர், கடல் போன்ற தம் சேனைகளோடு புறப்பட்டு, பறம்பு நாட்டை அடைந்தனர்; பறம்பு மலையினை முற்றுகையிட்டனர். இச் செய்தி பாரிவேளுக்கு எட்டியது. வள்ளன்மையிற் சிறந்த பாரி, மூவேந்தருடைய செய்கைக்கு. வெகுண்டிலன்; அவர்களை எதிர்த்திலன்; தனது அரனுக்கேற்ற பாதுகாவலை வைத்து, அரண் மனையுள் இனிதிருந்தான். அரனுள் இருந்தோர் அனைவர்க்கும் வேண்டிய உணவுப் பொருள்கள் அரனுள் இருந்தமையால் பாரியும் அவனுடைய குடிகளும் துன்பம் இன்றி இன்பத்தோடு | சில மாதங்கள் சென்ற பின்னர், அரனுள் இருந்தவர்களுக்கு உணவுப் பொருள் க ள் குறைந்தன. அவ்வேளை, புலவர் பெருமானான கபிலர் தாம் வளர்த்து வந்த எண்ணிறந்த கிளி களைத் தினந்தோறும் அரணுக்கு வெளியே விட்டார். அவை விளைநிலங்கட்குச் சென்று நெற் கதிர்களைக் கொண்டு மீளும், அவற்றை அரிசி மணிகளாக்கி அரணில் இருந்தோர் உண்டு. வந்தனர். . . . . - - . . . இங்ங்னம் நாட்கள் பல கழிந்தன. கபிலர் முதலாக அரனுள் அகப்பட்டோர், இனி உணவின்றி வருந்த நேரினும் நேரும் என அஞ்சினர். மூவேநதரும் பாரியை வெல்ல இயலாது மனஞ் சலித்தனர். அவ்வமயம் கபிலர் அரண்