பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாற்பெரும் புலவர்கள் வருந்தி நின்ற வனிதை ஒருத்தியைக் கண்டோம்: கிளைமையை உடையையோ எம்முடைய கேண் மையை விரும்புளவானுக்கு?’ என்று அவனை வணங்கிக் கேட்டேம்; அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் விரலாலே தன் கண்ணிரைத் துடைத்து, "நாங்கள் அவனுடைய கிளைஞரேம் அல்லேம், விளங்கிய புகழையுடைய பேகன் எம்மை ஒப்பான். ஒருத்தியுடைய அழகைக் காதலித்து ஒல்லென முழங்கும் தேருடனே முல்லை வேலியை யுடைய நல்லூரின் கண் எந்நாளும் வருவன் என்று பலரும் சொல்லுவர் என்று கூறினாள்' என்று, அவன் மனைவியின் பொறுக்கலாற்றாத துயரை விரிவாக எடுத்து விளம்பினார். பரணர் பின்னும் அப்பேகனை நோக்கி "மெல்லிய தகைமையுடைய கரிய மயில் குளிரால் நடுங்கும் என்று அருள் சுரந்து படாம் கொடுத்த புனிதனே!அழியாத நல்ல புகழினையுடைய மதம் பட்ட யானைய்ையும் மணஞ் செருக்கிய குதிரை யையும் உடைய பேக; யாம் பசித்தும் வருவோம் அல்லேம்; எம்மாற் பரிக்கப்படும் சுற்றமும் உடையேம் அல்லோம்; களாப்பழம் போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை இசை யினபத்தை விரும்பி உறைவார். அவ்விசையின் பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து அறத்தைச் செய்வாயாக அருளை விரும்பு வோய்! என யாங்கள் நின்னை வேண்டும் பரிசில் இதுவே! இற்றை இரவின்கண் ஏறிப்போய்க்