பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணா 65 ஆண்டிருந்த மகளிர் யாவரும் அருட்பாடல் களால் அக்கடவுளைத் துதித்தனர். முடிவில் சேரன் செங்குட்டுவன் நீடுழி வாழ்க" என்று அத் தெய்வம் அரசனை வாழ்த்தி மறைந்தது. அரசன் கண்ணகித் தெய்வத்திற்கு வேண்டிய பூசனை முதலியவற்றிற்குப் பல நிலங்களை விட்டு, ஏராள மான பொருளைக் கோயிலுக்கு அளித்தான். இங்ங்னமாகச் சேரர் பெருமான் தன் நாடு நோக்கி வந்த் பத்தினிக் கடவுளைச் சிறப்பித்தான். இவன் பொதுவாக வைதிக மதத்தினன்; ஆயினும் திரிபுரமெரித்த விரிசடைப் பெம்மானின் அணுக்கத் தொண்டன்; தன் மதமே சிறந்ததென் றும் யாவரும் அதனையே பின்பற்ற வேண்டுமென் றும இம்மன்னவன் தன் குடிகளை வற்புறுத்திலன். இவனது ஆட்சிக் காலத்தில், வஞ்சி மாநகரில் எல்லாச் சமயத்தவரும் தமமிற் கலந்து வாழ்ந்: தனர். செந்தண்மை பூண்ட அந்தணர்களையும் அறவோர்களையும் ஆதரித்துவந்த சிறந்த வள்ளல் என்று செங்குட்டுவனைக் கூறுதல் மிகையாகாது. வரையாது கொடுப்பதிலும் செங்குட்டுவன் நிகரற்றவன்.என்றே பெயர் பெற்றான்; தமிழில் வல்லவரான புலவர் பெருமக்கள பலரை இவன் ஆதரித்து வந்தான். அவர்களில் மிக்க சிறபபுறற வர்கள் சீத்தலைச் சர்த்தனார், பரணர் என போர் ஆவர். பரணர் செங்குட்டுவன் தந்தையான நெடுஞ்சேரலாதனால் ஆதரிக்கப்பட்டவர்; அவ னுககுப் பின்னர் ச செங்குட்டுவனால் ஆதரிக்கப் நா-5