பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் &5 யோடு புறப்பட்டுச் செய்குன்றின்மீது தங்கி, தென்றலில் திளைத்திருந்தான். அப்போது அங்கு அரிய நறுமணம் ஒன்று வெளிப்போந்து உலவியது. அம்மணம் யாண்டிருந்து வெளிப்போத்தது என்று நினைத்துச் சுற்றிப் பார்த்தான்; பார்க்கையில், தன் மனைவியின் கூந்தலினின்றே அந்நறுமணம் வருவதாக உணர்ந்தான்; உணர்ந்ததும், 'இவள் கூந்தலில் உண்டாய இம்மணம், இவளது கூந்தற்கு இயற்கையில் உளதோ? அன்றிச் செயற்கையில் உளதாயிற்றே? இவ்வுண்மையை அறிவேன்” என்று உறுதி செய்து கொண்ட்ான். * பின்னர், மன்னன் அரண்மனையை அடைந்து, "என் உள்ளத்துளாய ஐயத்தைத் தவிர்க்க வல்லார் இப்பரிசினைப் பெறுக' என்று, ஆயிரம் பொன்னடங்கிய கிழி ஒன்றினைச் சங்க மண்டப முன்னர்க் கட்டுவித்தான். சங்கப் புலவர்கள் அரசன் கருத்தை அறியமாட்டாராய் வாளா இருந்தனர். இங்ங்ணம் சில நாட்கள் கழிந்தன. - அக்காலத்து, ஆலவாய்ப் பெம்மானைப் பூசனை செய்து வழிபாடாற்றும் தருமி என்னும் அந்தணன் ஒருவன் அரசன் கட்டிய பொற். கிழியைப் பெற விரும்பினன். அவன் அண்ணலை நோக்கி, 'சொக்கேசா! அரசன் தனது ஐயத்தை நீக்குவோர்க்குப் பொற்கிழி ஒன்றைத் தருவதாகச் சங்கமண்டபத்தின் முன் துரக்குவித்துள்ளான். அடியேன் நின்னையன்றி வேறொருவரையும் துணையாகக் கொண்டவனல்லன். நான் நற்குல