பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

41


உயர்த்துவார்கள். தக்கவர்களிடம் சொல்லிக் கொள். தகாதவரிடம் விலகிக் கொள்; அவர்கள் ஆற்றப் போவதும் இல்லை; தீர்க்கப்போவதும் இல்லை; எதற்காக எடுத்துக் கூறுகிறாய்? விடு;விடு; விடு.”

“இன்பம் ஒரு போதை; அதன் வேட்கை தீர்க்க இயலாது; தொடர்ந்து அதன்பின் சென்று கொண்டு இருக்கிறாய்; நிழலைத் தேடுகிறாய்; அது நீண்டு கொண்டே போகிறது. நிழலின் நிஜம் இருட்டுதான். அதில் இருக்கும் வரை அது குருட்டுத்தனம். வெளிச்சத்திற்கு வா; பழி தரும் செயல்களைச் செய்து இன்பத்துக்கு வழி தேடாதே; போதைமருந்து இன்பம் தரும்; ஆனால் அது போதமன்று; ஏனைய இன்பங்களும் மயக்கம்; அதில் ஈடுபடத் தயக்கம் காட்டு, அதுவே உனக்குப் புகழ் தரும்.

“ஏன் வால் அறுத்துக் கொண்டாய்?” என்று கேட்டால் “வைகுந்தம் பார்க்க முடிகிறது” என்கிறது குள்ள நரி. தான் கெட்டது; மற்றவர்களையும் கெடுக்கிறது. இது நரிக்குணம்; மதங்கொண்ட யானை அது கீழ்மையைக் கருதாது. அது கரிக்குணம்.

“நல்லோர் தாம் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் கெட்டுப் போக வழி கூறமாட்டார்கள். அழிந்து போக நினைக்கமாட்டார்கள். பசி என்பதற்காகப் பரதேசிப் பயல்களிடம் கை நீட்டமாட்டார்கள். கீழ் மக்களை அண்டிப் பாழ்பட்டுப் போகமாட்டார்கள். வானமும் வையகமும் தாமே வந்து காலடியில் விழுவதாயினும் பொய்கலந்த சொல் அவர்கள் பேசமாட்டார்கள்.”