பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - நாலடியார்-தெளிவுரை

யானையின் புள்ளிகளையுடைய முகத்தினைப் புண்ணுண் டாகச் செய்யும் கூர்மையான நகங்களையும், வலிமையுடைய கால்களையும் உடைய சிங்கத்தினைப் போன்ற வலிமை உடையவர்கள், தம் தொழில் முயற்சிகளிலே குறைபாடு உடையவர்களாய், வீட்டிலேயே இருந்துகொண்டு ஒரு பொருளும் இல்லாமல் இறக்க நேரிட்டாலுங்கூட, மானம் இழக்க நேரும்படியான காரியங்களைச் செய்யவே LDss L_L ss doors.

‘எடுத்துக் கொண்ட முயற்சிகள் தடையுற நேர்ந்தாலும் அதனையே முயன்று முடிக்க முயல்வார்களே யல்லாமல், கீழான காரியங்களில் சிறந்தோர் ஈடுபட மாட்டார்கள் என்பது கருத்து.

199, தீங்கரும்பு ஈன்ற திரள்கால் உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு, ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம், பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை?

இனிமையான கரும்பானது ஈன்ற, திரட்சியான கால்களையுடைய குதிரையின் பிடரிமயிர் போன்ற பூவானது, தேனோடுங் கூடியதாகக் கமழ்கின்ற நறுமணத்தை இழந்ததைப்போலத், தன்னுடைய பெயரை நிலைநிறுத்துகின்ற பெரிய முயற்சியுடைமையானது இல்லாத விடத்து, ஒருவன் மிகவும் புகழுடைய உயர்ந்த குடியிற் பிறந்ததனால்தான் என்ன பயன்?

உயர் குடியிலே பிறந்தாலும் முயற்சியற்றவர்க்குப் பெருமை இல்லை என்பது கருத்து.

200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்

கருணைச்சோறு ஆர்வர் கயவர் - கருனையைப் பேரும் அறியார், நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். ஒருவித முயற்சியும் இல்லாத கீழ்மக்கள், பெருமுத்தரையர் என்பவர் மிகவும் விருப்பமுடன் அளிக்கின்ற பொரிக்கறியோடுங் கூடிய சோற்றினை உண்டு காலங்கழிப்பார்கள். பொரிக்கறியைப் பேரும் அறியாதவர், மிகவும் விரும்பிச் செய்த தம் முயற்சியின் பயனாகப் பெற்று உண்ட நீரும், அம் முயற்சிச் சிறப்பினால் அமுதமாக விளங்குவதாகும்.