பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 147

தருவதாகும். எந்த மருந்தாலும் போகாத அரிய நோயிலே கிடந்து துன்புறுவதைக் காட்டிலும், சாதலே ஒருவனுக்கு நன்மை தருவதாகும். ஒருவனது நெஞ்சம் புண்படும் படியாக இகழ்ந்து பேசுதலைவிட, அவனைக் கொன்று விடுதலே இனியதாகும். ஒருவனிடம் இல்லாத குணங்களை எல்லாம் இருப்பதாகக் கூறிப் பொய்யாகப் புகழ்ந்து பேசுவதைவிட, அவனை வைதலே நன்மை தருவதாகும்.

‘நட்புக் கொள்பவர் இவற்றை எல்லாம் ஆராய்ந்து ஏற்றவாறு நடந்து கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.

220. மரீஇப் பலரொடு பன்னாள் முயங்கிப்,

பொரீஇப், பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்; பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா, மரீஇய, பின்னைப் பிரிவு.

அநேகம் பேருடன் சேர்ந்து, பல நாட்களாகக் கலந்து பழகி, மனநிலையிலே ஒப்பாகிப் பொருளாகக் கருதும் ஒரு தகுதி உடையவர்களையே நட்பினராகக் கொள்ளுதல் வேண்டும். சினந்து எழுந்து உயிரைப் போக்குகின்ற பாம்பினோடும்கூட முதலிலே பழகிவிட்டால், பின்னர் விட்டுப் பிரிவதென்பது மிகவும் துன்பந்தருவதாயிருக்கும் அல்லவோ?

“தீயோரின் நட்பை முதலிலேயே விலக்கிவிட வேண்டும், நீடித்துப் பழகினால் அதனை விடுவது எளிதாயிராது; அதனால், அப்படிப் பழகாமலிருப்பதே சிறந்ததாகும்’ என்பது கருத்து. -

23. நட்பிற் பிழை பொறுத்தல்

‘தகுதியுடைய நண்பர்கள்’ என்று எவ்வளவுதான் ஆராய்ந்து ஆராய்ந்து உறவு கொண்டாலுங்கூட, அவரும் அறிந்தோ அறியாமலோ நம் மனம் புண்படும்படியான சிலபல பிழைகளைச் செய்து விடுதலும் இயல்பேயாகும். அப்படி அவர் பிழை செய்த காலத்திலே, சினந்து அவரை வெறுப்பதோ, அன்றிக் கடிவதோ நல்ல நட்பின் பண்பன்று. அவருடைய , மனநிலை மாற்றத்துக்கு வருந்தி, அப்பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த நட்பாகும்.

நட்பு நிலையாக வளரவேண்டுமானால், இந்த நட்பிற் பிழை பொறுத்தல் என்னும் பண்பு மிகவும்