பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 • , நாலடியார்-தெளிவுரை

நகையாடும்படியாக, நண்பனின் பாதுகாவலிலுள்ள அவன் மனையாளைக் கற்பழித்தவன் செல்லும் கொடிய தீக்கதியிலே’ யானும் செல்வேனாக.

239. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து,

வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப், புல்லறிவி னாரொடு நட்பு.

மனை-மனைவி. கட்டு-கற்பாகிய உறுதி. நண்பனுக்கு ஆபத்தில் உதவாதவன் தீக்கதி சேர்வான் என்பதைக் கூறி, அத்தகையோர் நட்புக் கூடாநட்பு என்பது சொல்லப்பட்டது.

தேன் கூடுகள் மலிந்த நல்ல வளம்பொருந்திய மலைகளையுடைய நாட்டின் தலைவனே! நட்பினால் வரும் நன்மையை அறிகிற தன்மை உடையவர்களது தொடர்பைக் கைவிட்டு, அற்பமான புத்தியை உடையவர்களோடு கொள்ளும் நட்பானது, பசுவினிடம் உண்டாகிற நெய்யினைப் பெய்து வைத்துள்ள பாத்திரத்தினுள், அந்த நெய்யைக் கொட்டி விட்டு வேம்பைச் சேர்ந்த நெய்யாகிய வேப்ப எண்ணெயைப் பெய்துவைப்பது போல்வதாகும். • ,

‘நல்ல நெய்யை இழந்து, கசக்கும் வேப்ப எண்ணெயைக் கொள்வது போன்றது என்று கூறிப் புல்லறிவினாரோடு கொள்ளும் நட்புக் கூடா நட்பு என்பது வற்புறுத்தப்பட்டது.

240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்னா,

பருகற்கு அமைந்தபால் நீர்அளா யற்றே; தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல், நாகம் விரிபெடையோ டாடி விட் டற்று.

பெருமைக்குரிய சிலபல நற்குணங்களை உடையவனாகிய ஒருவனிடத்திலே, ஊராருக்கு உதவுகிற இயல்பு இல்லாமல் இருத்தல் பருகுவதற்கு என்று அமைந்த பாலிலே நீர் கலந்திருப்பதுபோல ஆகும். அறிவு உடையவரும் கொடியவர் களோடு சேர்ந்தவர்களாகி விடுவது, நாகப் பாம்பானது பெட்டை விரியன் பாம்போடு கலந்து உயிர் நீங்கினாற் போன்றதாகும்.

‘நாகம் விரிபெடையொடு சேர்ந்தால் சாகும்’ என்பார்கள். அதுபோலவே, நல்லவரும் தீயோருடன் சேர்ந்தால் கெடுவர் என்பது கூறித் தீயோருடன் நட்புக் கொள்வது கூடா நட்பு என்பது சொல்லப்பட்டது.