பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 145

‘என்னுடையது என்னுடையது’ என்று உறுதியாகப்

பற்றிக் கொண்டிருக்கிற அறிவற்றவனின் செல்வத்தை, அதற்கு யாதொரு தொடர்பும் இல்லாத யானும் என்னுடையது என்னுடையது’ என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அச்செல்வம் அவனுடையதானால், அதனை அவன் தானும்

அநுபவியாமல் இருக்கிறான்; பிறருக்கு அதனை வழங்கி மகிழாமலும் இருக்கிறான்; இப்படி அவன் இருப்பானோ?.

யானும் அதனை அப்படியே ஏதும் செய்ய வகையின்றி இருக்கின்றேன் அல்லவோ!

‘கருமியிடம் இருக்கும் செல்வம் செல்வப் பயனைத் தராததினால் இல்லாதது போலவேதான் கருதப்படும் என்பது கருத்து.

277, வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உய்ந்தார்;

இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக் காப்புய்ந்தார்; கல்லுதல் உய்ந்தார்; தம் கைந்நோவ யாப்புய்ந்தார்; உய்ந்த பல.

தாம் பெற்றிருக்கும் பொருளைப் பிறர்க்கு வழங்கி உதவாத செல்வரைக் காட்டினும், அச்செல்வமே பெற்றிராத வறுமையாளர்கள் பழியினின்றும் தப்பியவர்கள் ஆவார்கள். அது எப்படி எனில் அவர் அதனை இழந்து விட்டனர் என்னும் அபவாதத்தினின்றும் தப்பினார்கள்; அதனை வருந்திக் காப்பதனின்றும் தப்பினார்கள்; அதனைப் புதைத்து வைப்பதற்கு நிலத்தைத் தோண்டுதலினின்றும் தப்பினார்கள்; தம்கைகள் நோவும்படியாகக் கெட்டியாகப் பற்றியிருப்ப தனின்றும் தப்பினார்கள். இப்படி அவர்கள் தப்பின பலவாகும்.

‘பணம் இருந்தும், உதவாதவன் இத்துணைத் தொல்லை களுக்கும் உள்ளாவான்’ என்பது கருத்து.

278. தனதாகத் தான்கொடான், தாயத் தவரும்

தமதாய போழ்தே கொடாஅர்;- தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார்; தான் கடியான் பின்னை அவர் கொடுக்கும் போழ்து.

பொருள் தனக்கு உரிமையுடையதாக இருக்கையிலேதான் கொடுத்து மகிழமாட்டான்; அவன் இறந்துபோன பின் அவனுடைய தாயத்தார்களும் அப்பொருள் தமதாக மாறிவந்த பொழுதிலே தாமும் கொடுத்து உதவமாட்டார்கள். முதலிலேயே பெற்றிருந்தவன் கொடுத்திருந்தால், அவர்கள்