பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 147 29. இன்மை

‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள். மனிதன் நல்வாழ்வு வாழவேண்டுமானால், உலக வாழ்விலே தானும் இன்பங்கண்டு, பிறருக்கும் உதவி வாழவேண்டுமானால் அதற்குப் பொருள் இன்றியமையாது. வேண்டப்படுவதாகும். ஆகவே, இவ்வாறு மிகமிக இன்றியமை யாததான பொருளினை, தம் ஊழ்வினைப் பயனாலோ, அல்லது தம் முயற்சி இன்மையாலோ அடையப் பெறாதவர்களின் துயரங்களைக் கூறுவதன் மூலம், பொருள் தேடுவதன் இன்றியமையாமையையும், அதனை நல்ல வழிகளிலே செலவிடுவதன் சிறப்பையும் வற்புறுத்துகிறது இந்தப் பகுதி.

ஐம்புலன்களாலும் அநுபவிக்கப்படும் பொருள் யாவும் பொருள் என்றே கருதப்படும். அவை இன்றேல் ஐம்பொறிகளின் அநுபவமாம் இன்பங்களும் இல்லை. அதனால் வரும் துயரங்களும் அதிகம்.

281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்,

பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்; ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. காவி தோய்த்த ஆடையினை அரையிலே சுற்றிக் கொண்டு துறவியாக ஒருவன் வாழ்ந்து வந்தாலும், அவன் பத்து எட்டுப் பொருளாவது உடையவனாக இருப்பது, அப்படிப்பட்ட பலருள்ளும் அவனுக்கு ஒரு பெருமை தருவதாயிருக்கும். உலகத்தாரின் தன்மதிப்பிற்கு ஏற்ற உயரிய குடும்பத்திலே வந்து பிறந்தாலும், யாதொரு பொருளும் இல்லாதவரானால், அவர் உயிர்போன உடலைப் பார்க்கினும் கீழானவராகவே உலகத்தாரால் கருதப்படுவார்கள்.

‘உலகிலே பெருமையும் சிறுமையும் பொருள் உடைமை குறித்தே ஏற்படுவது’ என்பது கருத்து. அத்து-தையலுமாம். கூறை ஆடை பத்தெட்டுசிறிதளவான பொருள். பிணத்திற்காவது, ஈமக்கிரியைகள் முதலியன செய்வர்; அவனுக்கு அதுவும் செய்யார்; ஆதலின், அதனினும் கடை என்றார்.

282 நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்

யாரும் அறிவர் புகைநுட்பம்; தேரின்