பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நாலடியார்-தெளிவுரை

287. நீர்மையே யன்றி, நிரம்ப எழுந்ததம்

கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்-கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார். கூர்மையின் சிறப்பினாலே முல்லை அரும்புகளின் சிறப்பினையும் வருத்துகின்ற பற்களையும் உடையவளே! வறுமை என்னும் துன்பத்தினாலே சேரப்பெற்றவர்கள், தம்முடைய நற்குணங்கள் மாத்திரமேயல்லாமல், நிறைவு உடையதாகச் சிறந்து நிற்கின்ற தம்முடைய நுண்ணறிவினையும், மற்றும் தம் எல்லா நலங்களையும் ஒருங்கே இழந்து விடுவார்கள்.

“வறுமையாளரின் நற்குணமும் கல்வியறிவும் பயனின்றிக் கெடும் என்பது கருத்து.

288, இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க்கு ஆற்றாது முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளுர் வாழ்தலின், நெட்டாற்றுச் சென்று, நிரைமனையிற் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. வறுமையாகிற தாழ்ச்சியான வழியிலே அகப்பட்டுத் தம்மிடத்திலே வந்து யாராகிலும் ஒன்றை இரந்தவர்களுக்கு உதவ முடியாத முட்டுப்பாடான வழியிலே சிக்கி, அவர்க்குக் கொடுப்பதற்கு முயன்றும் முடியாமல் தன்னுடைய உள்ளூரிலேயே வாழ்தலைக் காட்டினும், நெடுந்தொலைவு களையும் கடந்து தூரதேசங்களிற் போய், அவ்விடத்து வரிசை வரிசையாயுள்ள வீடுகளிலே கை நீட்டித், தான் இரந்து உண்கின்ற கெட்ட வழியிலே வாழும் வாழ்க்கையே ஒருவனுக்கு நல்லதாகும்.

இட்டு அற்பம் இட்டாறு - வறுமை. நிரைமனை ‘நிறைமனை’ எனவும் பாடம். பசிக்கு உணவு அளிக்கவும் இயலாத வறுமையின் கொடுமையைக் கூறிப், பொருளின் தேவை உணர்த்தப்பட்டது.

289. கடகஞ் செறிந்த தம் கைகளால் வாங்கி

அடகு பறித்துக் கொண் டட்டுக்-குடைகலனா, உப்பிலி வெந்தைதின்று உள்ளற்று, வாழ்பவே துப்புரவு சென்றுலந்தக் கால். - அநுபவிக்கப்படும் பொருள்கள் எல்லாம் போய் வறுமைப்பட்டு வாடின காலத்தே, முன்பு கடகம் செறிந்திருந்த தம் கைகளாலே பக்கத்துள்ள தூறுகளைத் தள்ளிக் கீரைகளைப்