பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - நாலடியார்-தெளிவுரை

தம் வாய்க்கு வந்த பாடங்களைச் சொல்லித், தாம் சொற்களின் நயத்தினை உணர்ந்தவர்களைப் போலப் பிறரைத் தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுகிற தீய அறிவுள்ளவரின் கூட்டத்திலே, அறிவுச் செறிவினையுடைய நல்ல புலவர்கள் ஒருக்காலும் சேரமாட்டார்கள். தீயகுணமுள்ள அந்தப் புலவன், அவையினுள், கேட்பவர்களின் மனம் வருந்தும்படியாக நற்புலவர்களின் குடியையே பழித்துப் பேசுவான். அதுவும் இல்லாவிடத்து, தோள்களைத் தட்டிக் கொண்டு அவர்களுடன் சண்டைக்கே எழுந்தாலும் எழுந்திருப்பான்.

‘அறிவுச் செப்பமின்றிப் பேச்சுக் கச்சேரி நடத்தும் போலிப் புலவர்களின் கூட்டத்திற்குச் சான்றோர் செல்ல மாட்டார்கள் என்பது கருத்து.

313. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,

கற்றாற்றல் வன்மையும் தாந்தேறார்,-கற்ற செலவுரைக்கும் ஆறறியார், தோற்பது அறியார், பலவுரைக்கும் மாந்தர் பலர். தம்மிடத்தே இருக்கின்ற சொல்லாற்றலையே பெரிதாகக் கருதிக் கொண்டு அந்தத் தினவினால் வாது செய்வதற்கு எழுந்திருப்பதை விரும்புவார்கள்; அந்த அவையிலுள்ள பிறர் கற்று ஆற்றல் உடையவர்களா யிருப்பதையும், அவர்களுடைய பேச்சு வல்லமையையும் தாம் உணர மாட்டார்கள்; தாம் கற்றவற்றைப் பிறர் உள்ளத்திலே சென்று புகுமாறு தெளிவாக எடுத்துச் சொல்லும் சொல்லின் முறைமையையும் அறியார்கள்; தாம் தோற்றுப்போவதையும் உணர மாட்டார்கள்; இப்படிப்பட்டவர்களாயிருந்தும், வீணாகப் பலவும் சொல்லிக் கொண்டேயிருக்கிற மாந்தர்களே இவ்வுலகத்தில் பலராக இருக்கின்றனர்.

‘அறிவுடையோர் இவர்கள் கூட்டத்தைக் கைவிடல் வேண்டும் என்பது கருத்து.

314. கற்றது.உம் இன்றிக், கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை நல்லா ரிடைப்புக்கு, நாணாது சொல்லித் தன் புல்லறிவு காட்டி விடும். தானாகப் படித்துத் தெரிந்தது என்பது சிறிதும் இல்லாமல், பள்ளியில் கணக்காயர் பிறருக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பாடத்தினால் ஒரு சூத்திரத்தை ஒரு பேதை