பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - நாலடியார்-தெளிவுரை

356. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்தரு

விளைநிலம் உள்ளும், உழவன்; சிறந்தொருவர் செய்தநன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை வைததை உள்ளி விடும்.

குறவன் எப்போதும் மலையின் வளத்தையே நினைத்துக் கொண்டிருப்பான். பயிர் செய்யும் உழவன் தனக்குப் பயன்தந்த விளைநிலத்தையே நினைத்துக் கொண்டிருப்பான். அதுபோலவே, சான்றோர், தமக்குப் பிறர் ஒருவர் செய்த உபகாரத்தையே சிறந்ததாக எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கயவனோ, ஒருவன் தன்னைத் திட்டினதையே எப்போதும் மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பான்.

‘நல்லவற்றை நினைக்கவும் செய்யான் கயவன்’ என்பது கருத்து.

357. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்;-கயவர்க்கு எழுநூறு நன்றிசெய்து, ஒன்றுதீ தாயின், எழுநூறும் தீதாய் விடும். தமக்கு முன்னம் ஒர் உதவியைச் செய்தவர் திறத்தில், சேர்ந்து உண்டான குற்றங்கள் நூறேயானாலும் அவற்றைச் சான்றோர் பாராட்டாமல் பொறுத்துக் கொள்வார்கள். கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து, ஒன்றுமட்டும் தீமையாகி விடுமானால், முன்செய்த அந்த எழுநூறு நன்மைகளும் தீமைகளாகவே அவர்களுக்குத் தோன்றும்.

இதனால், கீழோரின் இயற்கை கூறப்பெற்றது.

358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன,

மோட்டிடத்துஞ் செய்யார், முழுமக்கள்;-கோட்டை வயிரஞ் செறிப்பினும், வாட்கண்ணாய்! பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று. வாள்போன்ற கண்களை உடையவளே! நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம்முடைய தளர்ச்சியான காலத்தினும் செய்கிற நல்ல செயல்களை, மூடர்கள் தம்முடைய உயர்வான காலத்திலும் கூடச்செய்யமாட்டார்கள். தனதுகொம்புகளிலே பூண் கட்டினாலும், பன்றியானது, வீரங்காட்டும்படியான யானையைப் போலப் போர் செய்ய வல்லதாதல் இல்லையல்லவா! *