பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 183

‘கீழோர்க்கு உயர்வு கொடுத்தாலும், அவர், உயர்வான செயல்களிலே ஈடுபடுவராகார் என்பது கருத்து.

359. இன்று ஆதும்; இந்நிலையே ஆதும், இனிச் சிறிது

நின்று ஆதும் என்று நினைத்திருந்து, ஒன்றி உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார், பலர்.

“இன்றைக்கு நாம் செல்வம் உடையவராவோம்; இப்பொழுதே செல்வம் உடையவராவோம்; இனிமேற் சிறிது காலங்கழித்துச் செல்வம் உடையவராவோம்” - இப்படிச் சிந்தனை செய்துகொண்டே இருந்து, இவ்வாறு மென்மேற் சொல்லும் சொற்களின் அளவாலேயே தம் உள்ளத்திலே மகிழ்வடைந்து, தம்முடைய உள்ளம் இறுதியிலே செல்வம் பெறாததனால் மாறுபட்டுத் தாமரையிலையைப்போல இறுதியில் யாதும் பயன் பெறாமலே இறந்துபோனவர்கள் தாம் இவ்வுலகிற் பலராவர்.

‘செல்வம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாத போதும், வருவதாக பெருமை பேசித் திரிதல் கீழோர் இயல்பு’ என்பது கருத்து. . o

360. நீருட் பிறந்து, நிறம்பசியது ஆயினும், ஈரங் கிடையகத்து இல்லாகும்;-ஒரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து.

தண்ணிரின் உள்ளேயே தோன்றித் தன் நிறத்திற் பசுமையே உடையதானாலும் சடையினுள்ளே ஈரமானது ஒருபோதும் இருப்பதில்லை. அதுபோலவே, நிறைவான பெரிய செல்வத்திலே எப்போதும் நிலைபெற்றிருந்த காலத்தும், பாறையாகிய பெரிய கல்லைப் போன்ற இரக்கமற்றவர்களையும், இவ்வுலகம் உடையதாக இருக்கின்றது.

‘கயவர் கல்நெஞ்சம் உடையவராகவே இருப்பார்கள்’ என்பது கருத்து. .

7. பல்நெறி இயல்

‘பல் நெறி இய: லாவது ஒன்றுடன் ஒன்று தொடர்

பற்றதான பல்வேறு வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும் எடுத்துச்சொல்லும் இயல் ஆகும்.