பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நாலடியார்-தெளிவுரை

379. ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி, ஒண்ணுதலார்

தேற மொழிந்த மொழிகேட்டுத் தேறி,

எமரென்று கொள்வாரும் கொள்பவே, யார்க்கும்

தமரல்லர், தம்முடம்பி னார்.

ஒளிபொருந்திய நெற்றியை உடையவரான பொது மகளிர்,

பிறருக்குத் துன்பஞ் செய்யும்படியான தம் எண்ணத்தைத் தம்முள்ளேயே மறைத்துவைத்துக், காமுகர் நிச்சயமாக நம்பும்படியாகச் சொல்லிய பசப்பு வார்த்தைகளைக் கேட்டு, அவர்கள்மேல் நம்பிக்கை கொண்டு அவர்களை எம்மவர் என்று கூறிக்கொள்ளுகிறவர்களும் அவ்வாறே கூறிக் கொள்ளக் கடவார்கள்.வேசையர் எவ்வகைப்பட்டவர்க்கும் உரியவராகார் தம் உடலைத் தமக்கே உரிமையாக உடையவர் அவர் என்பதே உண்மையாகும்.

“வேசையரின் பசப்பு மொழிகளை உண்மையென நம்புதல் கூடாது. அவர் உடல் என்றும் அவர்க்கே உரியதன்றி அதனைப் பிறருக்குக் காதலால் உரியதாக்கும் இயல்பு அவரிடம் என்றும் கிடையாது’ என்பது கருத்து.

380. உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார்

கள்ளத்தாற் செய்யும் கருத்தெல்லாம்-தெள்ளி அறிந்த இடத்தும், அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். மனமானது மற்றொருவனிடத்திலே இருக்க, விளக்கமான நெற்றியினையுடைய பொதுமகளிர் கபடமாக அன்புடையவர் போற் செய்கின்ற கருத்துக்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்து அறிந்த காலத்தும் தீவினையின் மிகுதியை உடைய உடலினையுடைய பாவிகள், ஒருபோதும் அவர்கள் உறவின் கேட்டை அறியவே மாட்டார்கள்.

2. இன்ப இயல்

காமத்துப்பாலின் முதற்கண், ஒருசார் இன்பம் போலத் தோற்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொதுமகளிர் உறவினைக் கூறினார். அடுத்து முற்றவும் இன்பம் ஒன்றையே தருவதான கற்புடை மகளிரின் உறவினைக் கூறுகின்றார்.

இல்லற நூலினுள் பலபடப் பெண்களின் உறவினை வெறுத்துக் கூறப் பெற்றிருந்தும், அதனை விதந்து கூறும்