பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 19

மன்றம் முழுவதும் முழங்க மணப்பாறையாக விளங்கியவை, அன்று அவருக்கு அவ்விடத்திலே சாவுப் பறையாகப் பின்னர் ஒலித்தலும்கூட இவ்வுலகிலே நேர்வது தான். இந்த உண்மையை உணர்ந்து மாட்சிமைப்பட்டவர் களுடைய மனமானது, தாம் பிறவித் துயரினின்றும் தப்பிப் போகும்படியான வழியையே உறுதியாகப் பற்றிக்

கொண்டிருக்கும்.

‘திருமண நாளிலேயே வீழ்ந்துபோகும் நிலையாமையினை

உடையது உடம்பு என்பதனை உணர்ந்து, உலக இன்பங்களிலே

மனஞ்செலுத்தாமல், உயிர் உய்வதற்குரிய வழியான அறநெறி

களிலே மனஞ் செலுத்துவர் சான்றோர்’ என்பது கருத்து.’ மன்றம் - இங்கே திருமணத்திற்காகக் கூடியிருக்கும் அவை.

கறங்க-ஒலிக்க மாண்டார் மனம் அப்படி மதிக்கும் என்றதால்,

அங்ஙனம் மதியாதார் பேதைமையுடையார் என்பதும்

கூறப்பட்டது.

24. சென்றே எறிய ஒருகால்; சிறுவரை

நின்றே எறிப, பறையினை; - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள், மூடித், தீக் கொண் டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து

ஒருவர் இறந்துபோன இடத்திற்குச் சென்று ஒருமுறை கொட்டுவார்கள்; சிறிது நேரம் சும்மாவிருந்து மீண்டும் இரண்டாவது முறை கொட்டுவார்கள்; மூன்றாவது தடவை பறையினைக் கொட்டுவதற்குள் செத்துப் போனவர்களை இனிச் சாகப்போகிறவர்கள், துணியால் மூடித் தூக்கிச் சுமந்து கொண்டு, உயிரற்ற அந்த உடலை எரியிடுவதற்கு உரிய நெருப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பிப் போவார்கள். இதுதான், யாக்கையின் நிலைமை, இதனை நன்றாக எண்ணிப் பாருங்கள்.

‘எண்ணிப் பார்த்து, உடல் அவத்தைகளிலே ஈடுபட்டுச் சீரழியாமல், நற்கதியடைவதிலே நாட்டங் கொண்டவராக, அதற்குரிய மார்க்கத்திலே மனத்தைச் செலுத்துங்கள் என்பது கருத்து.

25. கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்

பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்,-மணங்

- கொண்டீண்டு ‘உண்டுண்டுண்டு என்னும் உணர்வினாற் சாற்றுமே ‘டொண் டொண் டொண் என்னும் பறை.