பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாலடியார்-தெளிவுரை ,

தலை நிறையப் பூச்சூடியும், பொய்யாகப் புனைந்து புனைந்து கோலஞ் செய்து கொண்டாலும், இதன் கெட்ட நாற்றம் முழுவதும் ஒழிந்து விடுமோ?

‘உடலின் உள்ளெல்லாம் கெட்ட நாற்றம் நிறைந்திருக்கும்; அதைப் போக்கத் தக்கோலந்தின்றும் புறநாற்றத்தைப் போக்கப் பூச்சூடியும் பெண் வந்தாலும், அவளுடைய உடலின்மேல் காமுற்று உள்ளந் தளரலாகாது. அதனை வெறுத்து நல்லற நெறியிலே மனஞ் செலுத்த வேண்டும் என்பது கருத்து.

44. தெண்ணிக் குவளை, பொருகயல், வேல்’ என்று,

கண்ணில்புன் மாக்கள் கவற்ற, விடுவேனோ உண்ணி களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணிமை கண்டொழுகு வேன்? உள்ளே இருக்கின்ற நீரைக் களைந்து போக்கி விட்டால் நுங்கைத் தோண்டி எடுத்து விட்டபின் அவ்விடத்தே காணப்படும் குழிபோலத் தோன்றும் கண்களின் உண்மையான தன்மையைப் பார்த்து, அதன் பால் மயங்காது நடந்து வருபவன் யான்; ‘தெளிவான நீரிலே மலர்ந்துள்ள கருங்குவளை என்றும், ‘பிறழ்கின்ற கயல்மீன்கள்’ என்றும், ‘வேல்’ என்றும் அக்கண்களைச் சொல்லி, அறிவற்ற அற்பமனிதர்கள் என்னைக் கவலைப்படுத்தலாம்; அதனைக் கேட்டு யான் உண்மையறிந்து மேற்கொண்ட துறவொழுக்கத்தைக் கை விடுவேனோ?

கவற்ற-கவலைப்படுத்த ‘உண்மையறிந்து துறந்த தான், உண்மையறியாத இவர்களின் பேச்சைக் கேட்டு மனம் மாறுவேனோ என்பது கருத்து. நீர்மை - தன்மை; குணம். பொரு கயல் - பிறழ்கின்ற கெண்டை மீன்.

45. முல்லை முகை, முறுவல், முத்து’ என்று, இவைபிதற்றும்

கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ, எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன்? அனைவரும் காணும்படியாக, ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிலே உதிர்ந்து சிதறிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்து, உடலின் நிலையாமையாகிய உண்மை நிலையை அறிந்து, துறவறத்திலே ஒழுகிவருபவன் யான். அப் பற்களின் தோற்றத்தை, ‘முல்லை அரும்புகள் என்றும்,’ “இளநகை’ என்றும் ‘முத்தெ'ன்றும், இன்னபடியெல்லாம் பிதற்றுகின்ற, நல்லற நூற்களைக் கல்லாத அற்ப மனிதர்களின்