பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாலடியார்-தெளிவுரை’

விளக்கானது ஒரிடத்திலே செல்லவும், அங்கே அதற்கு முன்னர் இருந்த இருளானது முற்றவும் அழிந்துபோவது போல, ஒருவனுடைய தவமாகிய ஒளியின் முன்னே பாவமாகிய இருளும் நில்லாது அழிந்து போய்விடும். விளக்கின் நெய் குறைந்துபோனவிடத்து ஒளி மறைய நேர்ந்தால் அப்படி நேர்ந்தவுடனே இருள் அங்குச் சென்று பரவுவது போல, நல்வினைகள் நீங்கியிருக்கும் ஒருவரிடத்திலே, தீயசெயல்களும் விரைந்து சென்று பரவி நிலைபெற்றுவிடும்.

‘புலன்கள் எதையாவது எப்போதும் செய்து கொண்டே இருக்கும் இயல்பின. அவற்றை நல்வினைகளிலே ஈடுபடுத்தாத போது தீவினை அவற்றைக் கவிந்து கொள்ளும். இதனை உணர்ந்து துறவு நெறியான தன்னெறியிலேயே அனைவரும் ஈடுபடுக என்பது கருத்து.

52. நிலையாமை, நோய், மூப்புச் சாக்காடென் றெண்ணித்,

தலையாயார் தங்கருமம் செய்வார்;-தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும் பித்தரிற் பேதையார் இல். செல்வங்களின் நிலையாமையினையும், நோய் மூப்புச் சாக்காடு என வரும் உடலின் நிலையாமையையும் குறித்து, மனத்திற் கொண்டவராகத், தலைமையான அறிவுடையவர்கள் தமக்குரிய உயிர்க்கு உறுதியான நல்ல செயல்களையே செய்வார்கள் என்றும் தொலையாத ஆரவாரத்தை உடைய போலியான நூல்களும், வருவதை உரைக்கும் சோதிட நூல்களும் என்று சொல்லப்பட்டவற்றையே நாளும் பிதற்றித் திரிகின்ற பைத்தியக்காரர்களை விடப், புத்தி கெட்டவர்கள் உலகத்தில் எவருமே இலராவர்.

‘அவை இவ்வுலக இன்பம் பற்றிக் கற்பித்துக் கூறுவனவே அல்லாமல், மக்களை உண்மை நெறிப் படுத்துவன ஆகா. ஆதனால் அவற்றை விடுத்து உறுதிப் பொருளிலேயே மனஞ்செலுத்த வேண்டும் என்பது கருத்து.

53. இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,

செல்வம், வலி, யென் றிவையெல்லாம்,-மெல்ல

நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்

தலையாயார் தாமுய்யக் கொண்டு.

இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப்