பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... orr-,

  • -i

- புலியூர்க் கேசிகன் - 41

-

- புலன் வழியாக எழுகின்ற ஆர்வத் துடிப்புக்களை

நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றலுடைய இளமைப்

பருவத்தினன், அந்த ஆர்வங்களை அடக்கி நடப்பதே மேலான அடக்கமாகும். மென்மேலும் வளர்ச்சியடையும் பொருள்நிலை இல்லாத ஒருவன், தன்னிடம் உள்ளதையும் மனமுவந்து கொடுப்பதே உண்மையான பயன்தரும் ஈகையாகும். எல்லோரையும் வெற்றிகொள்ளத் தகுந்த உடல் வலிமையையும் உள்ள உறுதியையும் உடையவனான ஒருவன், சினங் கொள்ளாமல், பிறர் தனக்குச் செய்த தீச்செயல்களைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையே உண்மையான பொறுமையாகும்.

‘ஏலாமையாற் சினங்கொள்ளாதிருத்தல் சிறப்பன்று; தன்னைப் பழித்தவனை ஒறுக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமையே பொறுமை என்பது கருத்து. கிளை பொருள்கிளைக்கும் பொருள். மதுகை-உடல் வலிமை. உரன்-உள்ள உறுதி.

66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச் சொல்

எல்லாருங் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல், தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு.

மந்திரித்து இட்ட திருநீற்றினால் படம் அடங்கின நாகப் பாம்பைப் போலத் தங்கள் தங்கள் குடிமையின் தகுதி காரணமாக வருத்தப்பட்டுக் கயவர் வாயினின்றும் வந்து கல்லால் எறிந்தது போலத் தாக்குகின்ற கொடுமையான சொற்களையும், யாவரும் காணும்படியாகப் பொறுத்துத் தமது தகுதியை நிலைபெறுத்துவார்கள் சான்றோர்கள்.

குடிமை-குலப்பெருமை. இழிந்தோர் பேச்சுக்கு எதிராகத் தாமும் இழிசொற்களைக் கூறாமல், தம் குடியின் தகுதி கருதி அவ்விழிந்தோர் பேச்சையும் உயர்ந்தோர் பொறுத்துக் கொள்வர்’ என்பது கருத்து. உய்த்தல்-செலுத்துதல்; தம் பெருமையை நிலைநாட்டுதல்.

67. மாற்றாராய் நின்று தம் மாறேற்பார்க்கு ஏலாமை

ஆற்றாமை என்னார், அறிவுடையோர்-ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால், தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று.

தமக்குப் பகைவர்களாக எதிர் நின்று, தம் பகைமைக்கு ஏற்ற செயல்களையே செய்துகொண்டிருப்பவருக்கு எதிராகத்