பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 47

காடுகள் செறிந்து நாட்டை உடையவனே! நண்பர்கள் ஒரோர் காலத்து இனிமையற்ற செயல்களையே செய்தாலும். அவை இனியனவாக நீங்கட்டும் என்று நினைத்துத் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கித் தன்னிடத்து நட்புக் கொண்டவரைக் கை விட்டுவிடுதல் விலங்கினங்களுக்கும் அருமையான செயலாகும்.

நண்பர் தமக்குத் தீமை செய்யும்போது, அது ஊழ் வினைப் பயன்; இனிதாக நீங்கட்டும் எனப் பொறுத்தல் வேண்டுமே அல்லாமல், நட்பினரைக் கைவிடுதல் கூடாது என்பது கருத்து. விள்ளல் - விடுதல். விலங்கினமே பழகியவரை அவர் தீமை செய்தாலும் விட்டு நீங்காது பொறுக்கின்றனவே; மனிதன் பொறுக்க வேண்டாமோ என்பதும் உணர்த்தப்பட்டது.

77. பெரியார் பெருநட்புக் கோடல்; தாம் செய்த

அரிய பொறுப்பவென் றன்றோ?-அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட! நல்லசெய் வார்க்குத் தமர்? ஒல்லென்று ஒலிமுழங்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! பெரியோர்களுடைய மேன்மையான தொடர்பினை யாவரும் விரும்பிக் கொள்ளுதல், தாம் செய்த பொறுத்தற்கரிய தவறுகளையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்’ என்றதனால் அல்லவோ? நல்லவைகளையே செய்பவர்களுக்கு நண்பராகச் சேருபவர்கள் அருமையானவர்களோ?

‘நன்மை செய்பவர்களுக்கு எவரும் நண்பராவர். பெரியோர் பிறர் குற்றங்களைப் பொறுத்து நன்மை செய்பவர்கள்; ஆதலால், அவர்கட்கு நண்பர்களும் மிகுதியாவர் என்பது கருத்து. தமர்-உறவினர்; அவர் போன்று நெருக்கம் உடைய நண்பர்.

78. வற்றி, மற் றாற்றப் பசிப்பினும், பண்பிலார்க்கு

அற்றம் அறிய உரையற்க!-அற்றம் மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத் துறக்குந் துணிவிலா தார். உடலானது வற்றி உலர்ந்துபோகும் அளவுக்கு மிகுதியான

பசித்துயரமானது ஏற்பட்டாலுங்கூடப், பண்பில்லாதவர்

களுக்குத் தமது வறுமையை அறியும்படியாகச் சொல்ல .

வேண்டாம். மிகுதியான துயரம் வந்த காலத்தில் தம் உயிரை,