பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாலடியார்-தெளிவுரை

விட்டுவிடும் துணிவில்லாதவர்கள். தமது வறுமையை அதனை நீக்கவல்ல நண்பர்களுக்குச் சொல்லுவார்கள்.

‘மிக்க வறுமை நேர்ந்தவிடத்தும், பெரியோர் அதனைப் பொறுத்துக் கொண்டு உயிரையேனும் விட்டு விடுவார்களே அல்லாமல் பிறரிடம் சொல்லமாட்டார்கள்; அப்படி உயிர்விடத் துணிவற்றவர்களுங்கூட அதனைப்பற்றி வெளியே கூறி அவமதிப்புக்கு ஆளாகாமல் உதவுபவர்களிடம் மட்டுமே சொல்லலாம் என்பது கருத்து.

79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க!-இன்பம் ஒழியாமை கண்டாலும், ஓங்கருவி நாட! பழியாகா வாறே தலை.

உயர்ந்த அருவிகளையுடைய நாட்டிற்கு உரியவனே! இன்பத்தைத் தந்து, அவ்விடத்தே தாழ்மை நேர்ந்தாலும், அதனால் அப்படி இன்பஞ் செய்தலை மீண்டும் விட்டுவிடாது, அதன் பக்கமாகவே இருக்கின்ற உனக்கு, இன்பம் நீங்காமல் இருப்பதைப் பார்த்தாலும், பழிப்பு உண்டாகாத அறவழியே தலைமையானதாகும்.

‘இன்பம் வருமிடத்துத் தாழ்வும் வருமானால் துன்பத்தை யேனும் பொறுத்துக்கொள்ள வேண்டுமேயன்றித் தாம் இன்பத்தை விரும்பித் தாழ்வுக்கு உட்பட்டுப் பழிக்கு ஆளாகக் கூடாது’ என்பது கருத்து. இருந்தைக்க இருக்கும் உனக்கு ஓங்கு அருவி-மேலாக எழும்பி விழும் அருவி.

80. தான்கெடினும்,தக்கார்கேடு எண்ணற்ற தன்னுடம்பின் ஊன்கெடினும், உண்ணார்கைத்து உண்ணற்க!

வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும், உரையற்க, பொய்யோடு இடைமிடைந்த சொல்!

தான் அழியவே நேர்ந்தாலும் அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு மேலோர்களுக்குக் கேடு செய்வதை ஒருவன் எண்ணாதிருப்பானாக தன் உடம்பின் ஊனே வற்றி, உடலே அதனால் அழிவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து கிடைக்கும் உணவை ஒருவன் ஒருபோதும் உண்ணா திருப்பானாக. வானம் கவிந்துள்ள உலகம் அனைத்துமே பெறுவதாயிருந்தாலும், பொய் இடையிடையிலே கலந்த சொல்லை, ஒருவன் என்றுமே சொல்லாதிருப்பானாக!