பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 o நாலடியார்-தெளிவுரை

திருமணத்திற்குத் தகுதியான நாளினைச் சான்றோர் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து, அந்நாளிலே பலரும் அறியும்படியாக மணப்பறைகளை முழக்கிக், கல்யாணஞ் செய்து கொள்ளப்பட்டுத், தம் பாதுகாப்பிலே வந்து சேர்ந்த, மென்மையான தன்மையினையும் தன்பால் விருப்பத்தையும் உடைய, மனையாட்டியும் தன் வீட்டிலே இருப்பவளாயிருக்க, அவளைத் தவிக்க விட்டுவிட்டு அயலானின் மனைவியை ஒருவன் விருமபிப் பார்ப்பதுதான், என்ன காரணமோ?

‘தன் மனைவியிருக்கப், பிறன் மனைவியை விரும்புவது தகாது’ என்பது கருத்து. அதனால் தன் மனைவி இல்லாதவன் விரும்பலாமா என்றால் அதுவும் கூடாது; அது அதனினும் மிகவும் வெறுக்கத்தக்கது என்பதற்கே இப்படிக் கூறினார்.

87. அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீஇ

வம்பலன் பெண்மரீஇ, மைந்துற்று, நம்பும் நிலைமையின் நெஞ்சத்தான் துப்புரவு, பாம்பின் தலைநக்கி யன்னது உடைத்து.

அயலார்கள் எல்லாரும் அலர் எடுத்துத் துாற்றவும், உறவினர் அதனால் நேர்ந்த பழிக்கு அஞ்சியும் அவனுக்கு நேரும் துன்பத்திற்கு அஞ்சியும் வருத்தப்படவும், மயக்கங் கொண்டு அயலானுடைய பெண்டாட்டியைச் சேர்ந்து, பிறர் நம்பத்தக்க நிலைமையிலே இல்லாத உள்ளத்தை உடையவன் அநுபவித்த இன்பமானது பாம்பினது தலையை ஒருவன் தன் பேதைமையால் நக்கினாற்போன்ற தன்மையையே உடைய தாகும்.

பளபளப்பானதென்று நினைத்துப் பாம்பின் தலையை நக்கினால் அவன் விஷத்தால் உயிர்த்துறக்க நேர்வதுபோலத் தற்காலத்தில் இன்பங் கிடைக்கிறதென்று அயலானின் மனைவியை விரும்பினால், முடிவிலே அழிவுதான் வந்து சம்பவிக்கும் என்பது கருத்து.

88. பரவா, வெளிப்படாப், பல்லோர்கண் தங்கா,

உரவோர்கட் காமநோ யோஒ கொடிதே! விரவாருள் நாணுப் படலஞ்சி, யாதும் உரையாதுள் ஆறி விடும். உள்ளத்திலே உறுதியினை உடையவர்களிடத்து உண்டாகும் காம நோயானது மிகவும் கொடுமையானதாகும். ஏனெனில், அது வளராமலும், வெளிப்படாமலும், பலரிடத்துச்