பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாலடியார்-தெளிவுரை

ஆராய்ந்து பார்க்குமிடத்து, இந்த உலகத்திலே ஒரு நிந்தைச் சொல்லையேனும் உடையவராக இல்லாதவர்கள் தாம் எவர்? தந்திரத்தினாலே வாழாதவர்தாம் எவர்? வாழ்நாளின் இடையிடையே துன்பத்தை அடையாதவர்தாம் எவர்? வாழ்நாளின் கடைசிவரையிலும் செல்வத்தைப் பொருந்தி யிருந்தவர்கள்தாம் எவர்? எவரும் இல்லை என்பது முடிவு.

இவை எல்லாம் உலகத்தில் உண்டாவனதாம் என்ற உண்மை உணர்த்தப் பெற்றது.

120. தாம்செய் வினை அல்லால் தம்மோடு செல்வதுமற்று,

யாங்கனுந் தேரின், பிறிதில்லை,-ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே, கூற்றங்கொண் டோடும் பொழுது.

நன்றாக எண்ணிப் பார்த்தால் இறந்துபோகுங் காலத்திலே தம்மோடுங் கூடவருவன தாம்தாம் செய்த நல்வினை தீவினை ஆகியவைகளே அல்லாமல் வேறு எதுவுமே இல்லை. கூற்றானது உயிரைப் பற்றிக் கொண்டு ஓடிப்போகும் பொழுது, அப்படித் தாம் பாதுகாத்துப் புனைந்து பேணிய உடம்பும் ஒருவிதப் பயனும் இல்லாததாகப் போய்விடும்.

இதனால், வினைப்பயன் ஒன்றே உண்மையில் நிலையானது என்ற மெய்ம்மை உணர்த்தப்பட்டது. அதனையுணர்ந்து அனைவரும் நல்வினைகளிலே ஈடுபட வேண்டும் என்பது கருத்து.

13. தீவினை அச்சம்

பொருள்களின் மெய்மை உணர்வதன் இன்றியமையாமை பற்றி முன் அதிகாரத்திலே கண்டோம். அப்படி ஒவ்வொரு பொருளையும் நுட்பமாக ஆராய்ந்து உண்மை காணும்போது, அவற்றுள் இவை நல்லன வென்பதும் இவை தீயனவென்பதும் பகுத்து அறியலாகும். r

இதேபோல, மெய்யுணர்வின் பயனால் வினைகளில் நன்மை தருவன யாவை என்பதனையும், தீமை விளைப்பன யாவை என்பதனையும் உணரலாம். அப்படி நன்மை தீமைகளைப் பகுத்து அறிபவர் தீமைகளை ஒதுக்கி நன்மைகளிலேயே மனத்தைச் செலுத்த வேண்டும்.

தீவினையின் பயனால், இம்மையிலே தீவினை செய்தவரும் மற்றும் பலரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அத்துடன் அதன்