பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருந்த பெண்ணை நேற்றுவந்தவன் அடித்துச் சென்று விடுகிறான்; கட்டிக் காத்தும் பயன் இல்லை; அவன் வாழ்க்கை வெற்று வேட்டாகிறது; இப்படித்தான் பலர் தேன்ஈயாக வாழ்கிறார்கள்; ஏன் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.

2. இளமை நிலையாது

(இளமை நிலையாமை)

கறுப்பு நிறத்து அழகி; விருப்புற்று அவள் பின் அலைகிறான்; அவனுக்குச் சுருட்டை மயிர்; மருட்ட அதனை வாரி முடிக்கிறான்; ‘அழகன்’ என்று தான் அவளிடம் சென்று குழைகிறான்; “அட அறிவிலி! இந்த முடி நரைக்கும்; வெளுக்கும்; மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இளமை உன் சொத்து; அதனைப் பத்திரப்படுத்து; பவித்திரமான செயல்களைச் செய்க; பாபம் பழி இவற்றை நாடி மருளாதே. இளமையிலேயே சுகங்களைத் துறக்கப் பழகு; அது உனக்கு மிகவும் நல்லது. குழவிப் பருவத்திலிருந்தே பற்றுகளை நீக்குக துறவு! அதனொடு நீ உறவு கொள்க.

“நீ ஒர் ஆண் அழகன்; செல்வன்; அதனால் உன்னைச் சுற்றிப் பெண்விழிகள் வட்டமிடுகின்றன; நண்பர்கள் சுற்றி வருகின்றனர்; அன்பு காட்டி அகமகிழ்கின்றனர். இந்த வாழ்வு என்றும் நிலைக்குமா? உன் சுருள் முடி திரை இடுகிறது; கறைபடிகிறது; முதுமைக்கு உன்னை இழுத்துச் செல்கிறது; நோய் உனக்கு நெருங்கிய நண்பன்; வைத்தியன் இடுக்கண் களைய மறுக்கிறான்; கைவிரித்துவிடுகிறான்; வந்தவர், கூடி இருந்தவர், “சீசீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறும் குள்ளநரிகளாகின்றனர்; உன்னை விட்டு விலகுகின்றனர்.