பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



ஒரு வாழ்க்கையாகாது, விடுதலைபெற்று வீறுடன் வாழ்க: அறம் செய்க. இங்கே இவனைப்பற்றி என்ன சொல்வது? அவனவன் கொடுத்துப் புகழ் பெறுகிறான்; இவன் தன்னைக் கெடுத்துக்கொண்டு இகழ்வு பெறுகிறான். மானம் கெட்ட வாழ்வு , வீட்டு முகப்புகளில் அந்த வீட்டுப் பதுமைகள் தரும் அகப்பைச் சோற்றுக்குக் கையேந்தி நிற்கிறான். 'உயிர் போகிறது; பிடி சோறு' என்று கேட்கிறான். இந்த உயிரை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்?

சோம்பல் மிகவும் கெடுதி, போ உழைத்துப் பிழை; உழைக்க நிமிர்ந்து நில்; பிறர் கையேந்தி நிற்காதே; திட்டமிட்ட வாழ்க்கை அமைத்துக் கொள்க; எதிலும் அளவோடு வாழ்வது என்று உறுதி கொள்க. பிச்சை எடுக்க நேராது. பிறர் உழைப்பின்றித் தருவதைக் துச்ச மாக மதித்து நட. பிச்சை எடுப்பது பிசகான செயல்; அது மாபெரும் வீழ்ச்சி; மானிடத்துக்கே அது தாழ்ச்சி."

5. இவளா அழகி! யோசித்துக் கூறு

(தூயது அன்மை)

அவள் ஆடை சற்று விலகுகிறது; அவன் அவளைச் சாடைகாட்டி அழைக்கிறான். பெண் வாடை வேண்டாம்என்று ஒதுங்கி வாழ்ந்தவன்தான்; அவள் மேனி அழகு கண்டு தேனி போலச் சுற்றி வட்டமிடுகிறான்.

2