பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாகும். அவர்கள் எங்களை மதிப்பார்கள்; எமக்குக் காசு கொடுப்பார்கள்” என்கிறான்.

“ஏன்யா” நல்லவர்களை மட்டும் விரைவில் நீ வந்து அழைத்துச் செல்கிறாய்? தீயவர்களை விட்டுச் செல்கிறாய்’ என்று எமனைக் கேட்டால் எமன் என்ன சொல்கிறான்? “தீயர்கள் வெறும் சக்கை; அவர்களால் இந்த உலகத்துக்கே நன்மை இல்லை என்றால் அவர்களை இழுத்துச் சென்று நான் என்ன செய்வது?” என்று பதில் கூறுகிறான் உயிர் பறிப்பவன்.

நல்லவர்கள் தாழ்வதும் அல்லவர்கள் உயர்வதும் நியாயம் என்று கூறமுடியாது. என்றாலும் உலக நியதி அப்படி அமைந்து விட்டது. அதைத்தான் ‘விதி’ என்று கூறுகிறோம்.

இந்தப் பரதேசிப் பயல்கள் இவர்கள் அணி அணியாக வீடுகள் நோக்கித் தம் கேடுகளைச் சொல்லிக் கையேந்தி நிற்கிறார்களே இப்படி இவர்கள் வறுமை உறுவதற்குக் காரணம் என்ன? இளமையில் தக்க கல்வி கல்லாமை; தொழில் செய்யத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளாமை ; வருவாய் வந்தபோது வகையாகப் பிடித்து வைக்காமை; என்று பதில் கூறப்படுகிறது ஏன் இத்தவறுகள் இவர்கள் செய்யவேண்டும். விதி அவர்களுக்கு வழி காட்டவில்லை; அவர் மதி கெட்டுவிட்டது.

கல்வி கற்றவன் ஒழுக்கம் மிக்கவன்; பண்பு உடையவன்; அறிவாளி; இவனும் மிகப் பெரிய தவறு செய்கிறான் என்றால் அதை நம்மால் நம்பவே முடிவதில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. எப்பேர்ப் பட்டவனும் தப்பேதும் செய்யாதிருக்கமுடியாது. இதற்கு