பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வாழ்த்துக் கூறுகிறார்கள். 'அவர் நம்ம தலைவர்' என்று பேசுகிறார்கள். மேடையில் வசைமாறி பொழிந்தவர்கள். ஏன் இப்படி இவர்கள் திசை மாறிவிட்டார்கள்?

பையன் எதுக்கும் உதவமாட்டான் என்று அப்பா அடித்துத் துரத்திவிட்டார். அவன் துபாய் சென்று ஏகப்பட்ட பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் 'திறமைசாலி' என்று அப்பா பாராட்டுகிறார்;

இந்த மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? நீயே யோசித்து முடிவு செய்க பொருள் உள்ளபோது உறவு காட்டுவர்; இல்லாதபோது எங்கும் குறைகளை அறைகுவர்.

பையனைப் பெண் பார்த்தாள், பெண்ணைப் பையன் பார்த்தான். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இருவருடைய உள்ளப் போக்கை அறியப் பெரியவர்கள் வினவுகிறார்கள்.

"பையனைப் பெண்ணுக்குப் பிடித்துவிட்டது; பெண்ணைப் பையனுக்குப் பிடித்துவிட்டது" என்று மற்றவர்கள் முடிவு செய்து விட்டனர்.

பெண் என்ன சொல்கிறாள்? "அப்பா விருப்பம்; அது தான் என் முடிவு" என்கிறாள். பையனைக் கேட்டால் அவனும் அப்படியே சொல்கிறான். தன் தந்தை விருப்பம் தான் தன் முடிவு என்கிறான்,

அப்பாக்களைக் கேட்டால் இருவரும் ஏகோபித்துச் சொத்து மதிப்புகனை எடை போட்டு விட்டுத் "தீர்மானமாக எங்களுக்குப் பிடித்துவிட்டது" என்று கூறுகிறார்கள், பையனும் பெண்ணும் மறுப்புக் கூறவே இல்லை.