பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

ஒன்று; சொல்வது வேறு. இந்த முரண்பாடுகள் மதிக்கத் தக்கவையா? நீயே முடிவு செய்க !

பிரகலாதன் கதை தெரியுமா? அவன் நாரணன்பக்தன்; இரணியன் அவனை எவ்வளவோ மாற்ற முனைந்தான். ஆசிரியர்கள் அவனைப் பலமுறை திருத்த முயன்றனர். மாற்றவே முடியவில்லை. நன்மையைத் தீயதாக மாற்ற முடியாது. கரும்பைக் கசக்கச் செய்ய இயலாது. அதே போல வேம்பை இனிக்கச் செய்யவும் முடியாது. இராவணனை மாற்ற முனைந்தவர் பலர்; தம்பியர் இருவர்; துணைவி ஒருத்தி, மண்டோதரி. இவ்வளவு பேரும் தோற்று விட்டனர்.

இறுதிவரை சீதையை மறக்கவே இல்லை, மூடர்கனை மாற்ற முடியாது ; கல்வி கற்பித்தும் பயன் இல்லை. காந்தி மகன் கதையும் மாற்றாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. இவை வாழ்க்கை உண்மைகள். உம்முடைய கருத்து என்ன ?

இந்த வீட்டில் ஏன் திடீர் கூட்டம் ? அவனுக்கு லாட்டரி சீட்டில் லட்சம் பத்து விழுந்ததாம்,

அதற்காக ஏன் இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அந்தக் காற்றில் குளிர்காய விரும்புகிறார்கள்.

நடிகை நட்சத்திரமாகி விட்டாள்; அவள் ஒருகாலத்தில் தாய் அவளை வீட்டை விட்டுத் துரத்தினாள் இவள் எதற்கும் உதவாதவள் என்று. இன்று அவள் தாய் காரியதரிசி.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டான்; எம். எல். ஏ; அமைச்சர் பதவி ; வோட்டுப் போடாதவர்கள் எல்லாம்