பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

யன் முதல் மதிப்பெண் தருவான்; சரியாகப் படிக்கா விட்டால் தேர்வு எழுதாவிட்டால் வட்டம்தான்; அதனால் வாட்டம்தான்.

12. எது உண்மை ? நீயே முடிவு செய்க

(மெய்ம்மை)

வன் மக்கள் தலைவன்; அப்படி அவன் சொல்லிக் கொள்கிறான். எப்படி அவன் இத் தலைமையைப் பெற்றான்? "நன்கொடை" தருவதாகக் கூட்டத்தில் கூறுவான்; அதை உடனே மறந்து விடுவான். கைதட்டியவரும் தொடர்ந்து கேட்டு அலுத்து விடுவர் வேறுவழி இன்றி.

நல்லவன் என்று சொன்னார்கள். ஊரில் அனாதை இல்லம் கட்ட நன்கொடை கேட்கச் சென்றோம். தொகை ஐயாயிரம் என்று 'செக்' எழுதித் தந்தான் தொல்லை பொறுக்க முடியாமல். அதற்குப் பணம் வங்கியில் இல்லவே இல்லை. அவன் கண்ணியத்தை வங்கி மதிக்க மறுத்து விட்டது; அவன் நல்லவன் தான்.

கஷ்ட காலம் உடனே உதவ வந்தான்; "முதல் தேதி வந்து பாரு" என்றான்; ஆளே வீட்டில் இல்லை; விசாரித்ததில் 'இன்று முதல் தேதி; அவர் வெளியே போய்விடுவார்'. என்று பதில் வருகிறது. அடுத்த நாள் சென்றோம். அவன் 'இன்று இரண்டு தேதி' என்கிறான்.

மகளை மணக்க வரதட்சணை தரமாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். கட்டிக் கொடுத்து விட்டார். கேட்டால், 'வரதட்சணை கேட்பது சட்டத்துக்குப் புறம்பு' என்று சாதுரியமாகப் பேசுகிறார். இவர்கள் செய்வது