பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

'நாலடியார் செய்திகள்' என்ற தலைப்பு இந்நூலுக்குத் தந்திருக்கிறேன். காரணம் இதற்கு முன் எழுதிய நூல் 'திருக்குறள் செய்திகள்' என்ற தலைப்பைப் பெற்றதே ஆகும்.

நாலடியார் மிகப் பழைய நூல்; சங்க இலக்கியத்தை அடுத்துப் பிற்பட்டு எழுதிய நூல் இது. இது பல புலவர்கள் பாடி வைத்த செய்யுள்களின் தொகுப்பு ஆகும். திருக்குறளை ஒட்டி இந்நூலுக்கு அதிகாரத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்குத் திருக்குறளைப் போலவே பத்துப்பத்துச் செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன; மற்றும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளையும் பெற்றுள்ளது. காமத்துப்பால் செய்தி ஒரே அதிகாரத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது.

நாலடியாரின் சிறப்பு அப் பாக்கள் பெற்றுள்ள உவமைகளே என்று கூறலாம். அனுபவம் வாய்ந்த செய்திகளையும், மக்கள் வழங்கி வந்த உவமைகளையும் தக்க இடங்களில் எடுத்து ஆண்டுள்ளமை இந்நூலுக்கு அழகும் சுவையும் தருகின்றது. திருக்குறள் ஈரடி கொண்டது. இது நான்கடி கொண்ட வெண்பாப் பாட்டு.

புலவர்கள் கவிதை அழகில் ஈடுபட விரும்புவர். மூலநூலைக் கற்றுப் பயன் பெறுகின்றனர். கவிதையோ உரைநடையோ இவை வடிவ வேறுபாடுகள்; செய்திகளே நூலின் உயிர் நாடி; அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் இதில் ஈடுபடச் செய்கிறது. அவற்றைப் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற