பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

சற்று ஏறக்குறைய பார்த்தும் பாராமல் பழகுவது நல்லது." நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இதற்குப் பரிசு கிடையாது.

"வான் வரை என் ஆணை செல்லும்" என்று ஆணவத்தோடு பேசியவர் எல்லாம் பதவி விட்டுக் கீழே தள்ளப்பட்டு விடுகின்றனர். "மக்கள் என்றும் மடையராக இருப்பர்; யானே ஆட்சியைக் காலமெல்லாம் கைப்பற்றுவேன்" என்று கட்அவுட் எழுப்பியவர் எல்லாம் 'கட்' 'அவுட்' ஆகிவிடுகின்றனர்; மக்கள் சாய்த்து வீழ்த்தி விடுகின்றனர். "ஜனநாயகம்" என்பது ஆற்றல் மிக்கது: அக்கிரமக்காரர்களை நீடிக்க விடாது.

பதவியிலிருந்து கீழே தள்ள முடியாது என்று பகற் கனவு காணாதே. தவறான ஒரு அடிபோதும் சறுக்கிவிழ, பதவியிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளவர் மக்கள் நலம் காப்பது அவர்கள் பொறுப்பு; அதனைச் செம்மையாக நடத்துவது நீதியின் விருப்பு. அடக்கம் உன்னை உயர்த்தும் அடங்காமை ஆரிருளில் உய்த்திவிடும். இப்படி அறிஞர்கள் அவ்வப்பொழுது அறிவிக்கின்றனர். எது உண்மை? நீ ஆராய்ந்து கூறு அறம் வெல்லுமா? வெல்லுகிறதா ஆராய்க. இஃது ஐய வினா.

அற நூல் கூறுகிறவர் அனைவரும் இந்த மூன்று செய்திகளை உரைக்கின்றளர். இளமை நிலைக்காது; யாக்கை நிலைக்காது. செல்வம் நிலைக்காது. அதனால் நிலைத்த தருமங்களைச் செய்க என்கிறார்கள்.

வாழ்க்கையில் நீ பொருள் ஈட்டுகிறாய். கடினமான உழைப்பு உனது. "ஈக பிறர்க்கு; உதவுக" என்கிறார்கள். "அதுவே புகழ் தரும்" என்கிறார்கள். நீ என்ன நினைக்-