பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உலகு அளவு" என்று ஓதுகிறாள். கல்விக்குக் கரை இல்லை; அதில் அக்கரை காட்டு; வாழ்வில் கரை ஏறலாம் கறை நீங்கி வாழலாம்.

தோணி ஓட்டும் படகுக்காரன் அவன் குகன்தான்; அவனிடம் நட்புப் பாராட்டினான் இராமன்; ஏன்? அவன் அன்பினன்; கறையற்ற காதலன். சாதி இருவர் இடை நின்று பேதிக்கவில்லை. படகோட்டி தொழிலால் கடத்தல்காரன்; அவன் ஓடத்தைச் செலுத்திப் பிறரைக் கரை ஏற்றுகிறான். ஞான குருக்களும் அத்தகையவரே. யார் ஆசிரியன் என்று பேதம் பாராட்டத் தேவை இல்லை; கரை ஏற்றும் ஆற்றல், தொண்டு, பணி, திறமை இவை இருந்தால் அவனை ஆசிரியனாகக் கொள்வர். கல்வி ஆசான் சாதி பற்றி மதிக்கப்படுவது இல்லை; கற்ற கல்வி பற்றிப் போற்றப்படுகிறான்.

தேவர் உலகத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் ? கேளிக்கைக் கூத்தில் அவர்கள் களிப்புக் காண்கிறனர். அரம்பையும் ஊர்வசியும் ஆடிக்கொண்டே இருக்கின்றனர்; அவர்கள் பேரழகினர்; கலை நுட்பம் வாய்ந்தவர்கள்; அங்கே அழகுச் சுவை இருக்கலாம்; அறிவுச் சுவை எங்கே இருக்கிறது? இதைக்காட்டித் தானே தேவர் உலகம் சிறந்தது என்பர். இங்கே பட்டிமன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வுக் கழகங்கள், அறிவு ஆராய்ச்சிகள் இவை சொல் விருந்துகள்; கற்ற புலவர்கள் உரையாடல் கவின் உடையது; சுவைபடப் பேசுவது இனிமை தருகிறது. இரட்டுற மொழிந்து சொல் நயம் விளைவிப்பர்; கவிநயம் காட்டிக் களிப்புறச் செய்வர். கவிஞர்கள் பாடிச்சென்று தேடிவைத்து புதையல்களை நாடி எடுத்துப் பொருள் கண்டு, தகைகண்டு, சொல் நயம், பொருள்பயன், அணி