பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பழிவிளைவிக்கும் வழிகளில் விழிகள் நாட்டம் செலுத்த மாட்டார்கள். இவ்வகையில் நிலவை விட நிறைகுணம் படைத்த சான்றோர் மேன்மை மிக்கவர் ஆவர்.

நல்லது தீயது இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு காரியத்தில் இறங்குவர் மேன் மக்கள்; உள்ளுவது எல்லாம் உயர் வையே நினைப்பர். ' "காட்டு முயலை வேட்டையாடி அதைப் பிடித்துக் கொண்டு வந்து குறி தப்பவில்லை என்று அறிவித்தால் யாரும் அவனைப் பாராட்டமாட்டார்கள். யானையைக் குறி வைத்து அம்பு எய்து அது தப்பினாலும் அவரைப் பாராட்டுவர்" என்பர் வள்ளுவர். நரியைக் குறி வைப்பதை விடக் கரியைக் குறி வைப்பதே பெருமை தருவதாகும். கரி என்பது கருப்பு நிறத்தை உடைய யானை: பிறர் தவறுகளைக் கண்டு அறையலாம் போலத் தோன்றலாம்; என்றாலும் அவனை அதற்காக மேன்மக்கள் வருத்த மாட்டார்கள். மற்றவர்கள் அவர்களை இகழக் கூடுமே என்று அவர்களுக்காக இரக்கம் காட்டுவர். பெரியோர் என்பவர் சிறியோர் செய்யும் பிழைகளைப் பொறுப்பது அவர்தம் கடமை ஆகக் கொள்வர். அதுவே அவர்களுக்குப் பெருமை தருவதாகும்.

கரும்பு கடித்தாலும் சுவைக்கும். பிழிந்துபருகினாலும் சுவைக்கும். அதனைச் சாறாகப் பிழிய நூறாகத் துண்டித்தாலும் அது தன் இன் சுவையில் சிறிதும் குறையாது. மேன்மக்களை நீ திட்டு; பேசு, வாட்டு அவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். "அஃது அவன் கருத்து, அதைப் பற்றிக் கவலை கொள்வது தவறு; நமக்கு நாம் உயர்ந்தவர்கள் என்று மதித்துக் கொள்ளலாம், அந்த