பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

இயல்புடையது. நடுங்கும் ஒடுங்கும். தீயவர்கள் "தம்மைப் பெரியவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்பாவிகள்; என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு இருப்பர்" என்று எதிர்பார்த்தால் அது பேதைமை ஆகும். பெருமை மிக்க நிலையில் உள்ளவர் சீற்றம் கொண்டால் அதை நீ ஆற்ற முடியாது; போற்றும் காவல் உள்ள இடத்தில் பொதிந்து மறைந்து கொண்டாலும் அவர்கள் காற்றும் புகாத இடத்தில் ஆதிக்கம் செலுத்தி உன்னை அடக்கிவிடுவர். பெரியோரை அவமதிக்காதே.

முளைத்து இலை மூன்று விடவில்லை ; அதற்குள் களைத்த சொற்களைக் கொண்டு வளைத்துப் பெரியோர்கனைத் தாக்குகிறாய், அறிவில் ஆற்றலில் தம்மை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய் அவசரப்படுகிறாய் , ஆவேசமும் கொள்கிறாய். அறன் அறியும் அறிஞர்கள் அவர்கள் தன் னடக்கம் உடையவர்கள். தம்மைத்தாம் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள்: ஆறி அடங்கி இருப்பர். அவர்களை மதித்து அவர்கள் தகுதி அறிந்து போற்றுவது சிறந்த கோட்பாடு ஆகும்.

சிறியவர் நட்புத் தொடக்கத்தில் சீறி எழும்; காலையில் தோன்றும் நிழல் பெரிதாகக் காணப்படும். வர வர மாமியாராகி விடும்; தேய்ந்து விடும். பெரியவர் நட்புத் தொடக்கத்தில் சிறிதாகக் காணப்படும். வரவரப் பெருகும்; மாலை நிழல் போல் அது நீண்டு கொண்டே இருக்கும். அது குளிர்ச்சியும் தரும்; மகிழ்ச்சியும் தரும். சிறியோர் தொடர்பைக் குறைத்துக் கொள்: பெரியோர் மதிப்பைத் தேடிக் கொள்,