பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

போலத்தான் தீயவரோடு பழகித் தீயவராக இருப்பவரும் நல்லவரோடு சேர்ந்து வல்லவராக மாறக் கூடும்; சேரும் இடம் அறிந்து சேர்வது உயர்வு தரும்.

நல்லவன் என்று பெயர் எடுக்கச் சில அடிப்படைச் செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதற்கண் 'அறநெறி யாது?’ என்று அறிந்து கொள்ள வேண்டும். அடுத்தது ,'நாமே கொடிகட்டிப் பறக்க முடியும்' என்று முடிவு செய்யக்கூடாது. எந்த நேரத்தில் எந்த அழிவு வரும் என்று முன் கூட்டி உரைக்க அல்லது கணிக்க இயலாது. நாம் பலரோடு பழகுகிறோம்; அவர்கள் நம்மைத் தாக்கிப் பேசக்கூடும்; கடுஞ்சொல் கேட்டுச் சுடுசொல் கூறத்தேவை இல்லை. அவர்களை மன்னிக்கும் மாண்பு நம்மிடம் அமைய வேண்டும்; அதனோடு அவர்கள் அவ்வாறு கூறக் காரணம் என்ன? நம்மிடம் உள்ள குறையாது என்று ஆராய்ந்து அவற்றைக் களைய முற்பட வேண்டும். பிறரை ஏய்த்து வாழவேண்டும் என்று சிறிதும் நினைக்க வேண்டாம். தீய செயல்களை மேற்கொள்வாரை வெறுத்து ஒதுக்கவும்: பெரியவர் கூறும் வாய்மை மிக்க சொற்களைப் போற்றிக் கொள்ளவும்; இந்த நல்ல பழக்கங்கள் சேர்ந்தால் நல்லவன் என்று மதிப்புப் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த உலகத்தில் நம்மை அடையும் துன்பங்கள் மூன்று; ஒன்று நம் நெருங்கிய உறவினைரைப் பிரிந்து வாழ்தல்; மற்றொன்று தீராப்பிணி, மூன்றாவது கேடுகள். கேடுகள் எவை என்று கூறமுடியாது; இழப்புகளைத்தான் கெடுதிகள் என்று கூறுகிறோம். 'அவனுக்கு என்ன கேடு' என்றால் 'அவனுக்கு என்ன இழப்பு' என்பதுதான் கருத்து.