பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

இந்த மூன்று துன்பங்களும் அணுகும்போது அவற்றைத் தாங்கவும் போக்கவும் பெரியவர்களின் துணை தேவைப்படுகிறது. நல்லவர்கள் இணக்கத்தை நாடவேண்டி உள்ளது. கற்றறிந்த கல்வியாளரின் தொடர்பு இவற்றை நீக்க வல்லது ஆகும்.

மரணம் என்பது ஒன்று உண்டு என்பதால் இந்தப் பிறவி நிலையற்றது என்று களைய முற்படார். பிறப்பு வெறுக்கத் தக்கது அன்று; அதனைச் சிறப்புற்றுச் செய்வதில்தான் நம் பெருமை அடங்கி இருக்கிறது. பண்புமிக்க நண்பினர்கள் வாய்த்தால் வாழ்க்கை ஒண்பு உடையது ஆகிறது. அஃது ஒளி பெறுகிறது; எனவே வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை தக்க பண்பினர் நமக்கு அன்பினராக உள்ளனர் என்ற நிலை ஏற்படுவதால்தான்.

ஊரில் உள்ள கழிவுநீர் அதனைச் சாய்க்கடை என்பர்; அஃது ஆற்றோடு சங்கமிக்கும்போது அதன் உவர்த் தன்மையும் கழிவுத் தன்மையும் பேராற்றில் கலந்து விடுகின்றன. இரண்டும் கலக்கும்போது சிறுமை பெருமை பெறுகிறது. அந்தப் பழமை அதனை விட்டு நீங்குகிறது. அதனையும் அந்த ஆற்றின் கிளை என்றே கருதுவர். அது தூய்மை பெறுகிறது. உயர்வும் அடைகிறது. அதே போலக் கீழ்த்தரம் மிக்க பாழ்பட்ட வாழ்க்கை உடைய வரும் மேல்தரம் உள்ள மேன்மக்களோடு சங்கமித்தால் அவர்களும் பழைமை, அழுகல், உளைவுகள், வளைவுகள், நெளிவுகள் அனைத்தும் நீங்கிச் செம்மை அடைகின்றனர்; சீர் பெறுகின்றனர்; சிறப்பு அடைகின்றனர்.

ஒளி வீசும் தண் மதியததை முயல் என்ற கறை சேர்கிறது; அது மதிக்கத்தக்கது அன்று எனினும் வான்