பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நிலவை வையகத்தார் வணங்கும்போதும் தொழும்போது இந்த முயலும் மதிக்கப்படுகிறது; அதுவும் வணங்குதற்கு உரிய பொருள் ஆகிறது. சிறியவர்களும் பெரியவர்களோடு சேரும்போது சீர்மை பெறுகின்றனர். அவர்களும் மதிக்கப்படுகின்றனர்.

பாலில் நீர் கலந்தால் பால் நீராகாது; நீர் தான் பால் நிறம் பெறுகிறது; பால் என்றே பருகப்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களோடு ஒன்றி உறவாடிநட்புக் கொண்டால் அவர்களும் மதிக்கப்படுகின்றனர். அந்தப் பெரியவர்களைக் கொண்டுதான் இவர்கள் அடையாளம் காட்டப்படுகின்றாை,

உழவர்கள் ஏர்க் கலப்பை புல் எங்கிருந்தாலும் அதைத் தூக்கி எறிந்து சமன்படுத்திவிடும்; என்றாலும் உயரமான இடத்தில் கற்கள் பொதிந்த மரத்தின் அடிப்பகுதியில் முளைத்துக் கிடந்தால் கலப்பை அதனைத் தொடாது. அதே போலச் சார்பு உணர்ந்து அவர்கள் சேர்ந்த இடம் அறிந்து பகைவர்கள் சிறியவர்களைத் தொட மாட்டார்கள். பெரிய இடத்துச் சார்பு இருக்கிறது என்றால் அவர்களைத் தொட அவர்களோடு போர் இடப் பின் வாங்குவர். பெரியவர்களின் தொடர்பு சிறந்த தற்காப்பைத் தருவது ஆகும்.

நிலத்தின் தன்மையை ஒட்டி அதன் புலத்தில் விதைக்கும் நெல் நலம் பெறுகிறது, சிறப்பும் பெறுகிறது. நீர் வளமும் நிலவளமும் நெல்லின் செழிப்புக்குக் காரணம் ஆகின்றன. அதே போலக் குடிப் பிறப்புச் சான்றாண்மைக்கு வித்தாகிறது.சத்தாகிறது: உரம்சேர்க்கிறது; உறுதி பயக்கிறது. நற்குடியில் பிறந்த நல்லோர் ஆயினும் அவர்-