பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

காரிகையரும் பேதலித்து விட்டு விலகுகின்றனர். தாய்மை அவர்களை ஈர்ப்பதால் கட்டியலனோடு தொடர்ந்து உறவாடுவது இல்லை; அவர்களும் ஏதோ பேருண்மை காண்பதில் நாட்டம், கொண்டு இயங்குகின்றனர். காதல் மக்களும் முற்றிய முதுமையில் நம்மை விட்டு விலகி விடுகின்றனர்; ஊன்று கோலாக இருப்பர் என்று எண்ணியது தவறு ஆகி விடுகின்றது. பாசம் வைத்த மக்கள் நேசம் மறந்து தனித்துப் போய்விடுகின்றனர். அதனால் இந்த உலக வாழ்வில் பற்றுக் கொள்ளுதலும் அதற்காக நம்மை நாம் விற்றுக் கொள்ளுதலும், அறியாமை ஆகும். பற்றுகள் நீங்கில் அடுத்தது யாது? எது மெய்ப் பொருள் என்று காண்பதற்கு அடிப்படை துறவுள்ளம்; அந்தத் துறவோடு உறவு கொள்வதே உறுதிபயப்பதாகும்.

இல்வாழ்க்கை தான் நல்வாழ்க்கை என்று அதில் அகப் பட்டு உழல்கின்றோம். அதுதான் காப்பு; இங்கு அது தரும் இன்பமும் சுகமும் எதுவும் தராது என்று எப்பொழுதும் அந்தச் சிறு உலகத்தைச் சுற்றியே நம் கற்பனைகள் சென்று வருகின்றன. என் வீடு, என் மனைவி, என் மக்கள் என்று எண்ணி எண்ணி அதற்காகவே அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். என்ன சுகம் காண்கிறோம்? சிக்கல் நிறைந்தது இல்வாழ்க்கை; எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி வருகிறது! என்றுமே ஏதாவது தொல்லைகள் நம் எல்லைகள் என அமைகின்றன. எனக்கு என்ன குறை? வசதிகளைப் பற்றிப் பேசி இவைதாம் வாழ்வியல் என்று கருதி உயர் உண்மைகளை நம் கட்டுக்குள் மறந்து வாழ்கின்றனர். எதுவும் நிலைப்பது இல்லை, நம் கட்டுக்குள் அடங்குவது இல்லை; இவ்வளவும் தெரிந்தும் அதே சேற்றில்தான் உழல்கிறோமே தவிரக் காற்று வாங்கிச் சுகப்பட விரும்பு