பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உரையாசிரியர் உரை - சுந்தர சண்முகன் -


பெயர்க் காரணம்:

சங்க இலக்கியங்கள் எனப்படும் பதினெண் (18) கீழ்க்கணக்கு நூற்களுள் திருக்குறளுக்கு அடுத்த பெருமையுடையது நாலடியார்தான்! திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறுகிய(குறள்)பாக்களை உடையதாதலின் திருக்குறள்’ எனப் பெயர் வழங் கப் பெறுகிறது. அங்ங்னமே, நான்கு அடிப் பாடல் களையுடைய நூல் நாலடி எனப்பட்டு, பின்னல் ஆர்’ என்னும் சிறப்பு விகுதி சேர நாலடியார்’ என் வழங்கப்பெறுகிறது. இந்நூல் நானூறு பாடல்களை உடையதாதலின், இதனை 'நாலடி நானூறு' எனவும் வழங்குவர். அறம் உரைக்கும் தமிழர் மறைநூல் ஆதலின், இதனை 'வேளாண் வேதம்’ (வேளாளர் = தமிழர்) எனவும் அழைப்பர்.

நூல் வரலாறு:

எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதிவைத்துவிட்டுப் போன எண் ணாயிரம் பனேயோலைச் சுவடிகளை, என்னவோ குப்பை என எண்ணிப் பாண்டியமன்னன் வைகை யாற்றில் எறியச்செய்ய, அவற்றுள் நானூறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்ததாகவும், அவற்றின் அருமையுணர்ந்து அவற்றைத் தொகுத்து நாலடியார்’ என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் கதை கூறப்படு கிறது. ஆமாம்-கதையேதான் இது!