பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தேனீக்கள் மலரிலிருந்து உறிஞ்சித் தேன் எடுப் பதுபோல, இந்தக் கதையிலிருந்து நாம் உறிஞ்சி எடுத்துக்கொள்ளக்கூடிய உண்மைக்கருத்தாவது: 'திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவரா லேயே அருளப்பட்டதுபோல, நாலடியார் ஒருவரா லேயே இயற்றப்படவில்லை; பலர்,இயற்றிய பாடல் களின் தொகுப்பே காலடியார்’-என்பதாகும். சங்க இலக்கியங்கள் பல, இவ்வாறு பலரால் இயற்றப் பெற்ற பாடல்களின் தொகுப்பே என்னும் உண்மை ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. ந | ல டி யார், பதுமனர் என்னும் புலவரால் தொகுக்கப் பெற்ற தாகச் சொல்லப்படுகிறது. நூல் அமைப்பு: நாலடியாரின் நானூறு பாடல்களும், திருக் குறளேப் பார்த்து அதே மாதிரியில் வகை தொகை செய்யப் பெற்றுள்ளன. அதாவது, அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என மூன்று பால்களும், ஒவ்வொரு பாலிலும் பல இயல்களும், ஒவ்வோர் இயலிலும் பல தலைப்புக் களும் (அதிகாரங்களும்), ஒவ்வொரு தலைப்பிலும் பத்துப் பத்துப் பாடல்களுமாக ந | ல டி யார் உருவமைக்கப் பெற்றுள்ளது. . நாலும் இரண்டும்: திறக்குறளைப் போலவே வடிவமைக்கப் பெற் றுள்ள நாலடியார், திறக்குறளுக்கு அடுத்தபடி யாக அன்றுதொட்டு இன்றுவரை பலராலும் பரவ லாகப் போற்றப்பெற்று வருகிறது. டாக்டர் ஜி. யு.போப் (G. U. Pope) என்னும் ஆங்கிலேய ரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலக அரங்கிலும் பரவியுள்ளது இந்நூல். இரண்டடிப்