பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 துறவறவியல் உயர்ந்தோர், மந்தரித்து இட்ட திருநீற்ருல் விரைவில் படம் அடங்கிய பாம்புபோல, தத்தம் குடிப் பெருமையால் கட்டுண்டு, கீழோர் வாயிலிருந்து கல் வீசிகுற்போல் வருங் கொடுஞ்சொல்லே யாவரும் அறியப் பொறுத்துக்கொண்டு போவர். - 12 பகைவராய் நின்று தம்மோடு மாறுகொள்ளும் அற் பர்க்கு அடங்கி ஒதுங்கிப் போதலைக் கோழைமை என்று அறிவாளிகள் கருதார்; எனவே, அவர்கள் பொறுக்க முடியாதபடி எதிரிட்டுத் துன்பம் செய்தால் தாம் பதிலுக்கு அவர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே நல்லது. 127 கீழோரது சினம் நெடுநாள் ஆலுைம் நீங்குதல் இன்றி வளர்ந்து கொண்டேபோகும். சிறப்புடைய பெரியோர் சினமோ, காய்ச்சும்போது தண்ணிர் கொள்ளும் சூட்டைப் போல் சிறிதுநேரம் இருந்து பின்பு தானகவே அறிவித் தாம் உதவி செய்ததை உணராமல் ஒருவர் தமக்கு மிக வும் திமையே செய்தாலும், தாம் பதிலுக்கு நன்மையே செய்வதைத் தவிர, அவரது தவறுக்காக அவர்க்குத் தீமை செய்ய முயலுதல், வானளவு உயர்வு மிக்க குடும்பத்தில் பிறந்த நல்லோரிடம் இல்லை. 129 நாயானது வெறிமிக்குக் கவ்விக் கடிக்கக் கண்டும், தம் வாயால் பதிலுக்கு அந்நாயைக் கடித்தவர் இவ்வுலகில் இல்லை. எனவே, கீழோர் பண்பு இன்றிக் கீழான சொற் களைச் சொன்னல், மேலோர் தம் வாயால் பதிலுக்குத் திருப்பி அவ்வாறு சொல்வார்களோ ? 130