பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அரசியல் பொருட் பால் அரசியல் 14. கல்வியின் சிறப்பு மயிர் முடியின் அழகும் வளைந்த ஒரக்கரையிட்ட உடையழகும் பூசும் பூச்சழகும் ஒருவர்க்கு உண்மையான அழகாகமாட்டா. யாம் மனத்தால் நல்ல தன்மை உடையோம் என்னும் நடுநிலைப் பண்பை உண்டாக்கு வதால் கல்வி அழகே உண்மை அழகு. 131 கல்வியானது இவ்வுலக இன்பமும் அளிக்கும்; கொடுக்கக் கொடுக்கக் குறையாது வளரும்; தம் புகழை விளங்கச் செய்யும்; தம்மைப்புகழால்என்றும் உள்ளவராக்கி அழியாது நிற்கும்; இத்தகைய கல்வியைப் போல, அறியாமையாகிய மயக்கத்தைப் போக்கும் மருந்து யாம் எவ்வுலகிலும் கண்டதில்லை. 132 உவர் நிலத்தில் தோன்றிய உப்பை நன்செய் நிலத்தில் தோன்றிய நெல்போல் சிறந்ததாக உயர்ந்தோர் மதிப்பர் அதுபோல், தாழ் குடியில் பிறந்தவராயினும் கற்றறிந்தவர் களைத் தலைமையிடத்தில் வைத்துப் போற்றவேண்டும். 133 கல்வி, செல்வம்போல் வைத்த இடத்திலிருந்து யாராலும் கவரப்படாது; பாடம் கேட்பவர் வாய்க்கப் பெற்றுக் கற்றுத் தரின் அழியாது மேலும் வளரும்; மிகுந்த பெருமைக்குரிய வேந்தர் சினக்கினும் பறிக்க முடியாது; எனவே , ஒருவன் தனக்குப்பின் தன் பிள்ளைகட்கு வைப்பு நிதியாக அளித் துப்போக வேண்டியது கல்வி தவிர வேறில்லே. 134 கல்விக்கோ அளவில்லை; கற்பவரின் வாழ்நாட்களோ சிலவே, அந்நாட்களிலும், மெல்ல எண்ணிப் பார்க்குங்கால், நோய்கள் பல உள என்பது புலனுகும்; எனவே, நீரை நீக்கிப் பாலேமட்டும் பருகும் அன்னம் போல, தெளிவாக ஆராய்ந்து, நிறைவுடைய நல்ல நூற்களையே தேர்ந் தெடுத்து அறிவுடையோர் கற்பர். 135