பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அரசியல் 15. பிறந்த குடியின் (குடும்பத்தின்) பெருமை அரிமா (சிங்கம்) பசித் துன்பம் மேலிட்டபோதும் கொடிப் புல்லேக் கடித்துத் தின்னுமா ? தின்னது. அது போல, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர், உடை சிதைந்து பசியால் உடம்பு மெலிந்தபோதும் (குறுக்கு வழியில் வாழ்வு பெறுவதற்காகத்) தமது உயர்ந்த குறிக்கோளி லிருந்து மாற்ர் 141 வானளாவிய-மேகம் தவழ்கின்ற மலைநாடனே! மாண்பும் பழகும் பதமும் நல்லொழுக்கமும் ஆகிய முப் பண்புகளும், வானளாவிய புகழ் மிக்க உயர் குடியில் பிறந்தார்க்கல் லாமல், பெருஞ் செல்வம் பெற்றபோதும் தாழ்குடியினர்க்கு அமையா 142 பெரியோர் வரின் இருக்கைவிட்டு எழுதலும் எதிர்சென்று அழைத்துவருதலும் அவரை வழியனுப்பும்போது சிறிது தொலைவு உடன் செல்லுதலுமாகிய இன்ன பல உயர் பண்புகளை, உயர் குடிப் பிறந்தவர் குறையாத இயற்கை யொழுக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வொழுக்கம் அற்ப சிடம் இருப்பதாகக் கருதமுடியாது. 143 ஒருவர்க்கு உயர்குடிப் பிறப்பு கிடைத்துள்ளது எனில், அவர் நல்லன செய்தால் உயர்குடிப் பிறப்பின் இயற்கை யென்று உலகம் கூறும்; தியன செய்தால், பலரும் துற்றும் பழிக்கு இடமாகும்; எனவே, எல்லாம் உணர்ந்த உயர்குடியில் பிறந்ததால் அவருக்குச் சொந்த நன்மை என்னவோ ? - 144 மாண்பற்ற தாழ்குடியில் பிறந்தவர், படிக்காத அச்சம், கயமைத் தொழில் செய்யும் அச்சம், நல்லோர் அவை நடுவே ஒன்றும் பேசவியலாமையை எண்ணிச் சோர்ந்துபோகும் அச்சம், எல்லாமே இரப்பவர்க்கு ஒன்றும் கொடுக்கமுடியாத அச்சம் ஆகிய அச்சங்களை உணராத மரக்கட்டைகளாய் மரத்துப்பேர்வர். 145