பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அரசியல் குளிர்ந்த பெரிய கடற்கரை நாடனே தாழ்ந்தோரது நட்பு முற்பகல் நிழல்போல் வரவரக் குறைந்து மறையும்; தொன்றுதொட்டு வரும் புகழாளரது நட்போ மறையாமல் பிற்பகல் நிழல்போல் போகப் போக நீண்டு நீண்டு வளரும். - 166 அடர்ந்து தளிர் கொண்டு தாழ்ந்திருக்கும் குளிர்ந்த மரங்களெல்லாம் தம்மை யடைந்தார்க்கு ஒருசேர இடம் தரும். அரசரது செல்வத்தையும் மகளிரின் அழகு நலத்தையும் அடைந்தவர் நுகர்வர். இதில் தடையில்லே. 167 வற்ருத நீண்ட பெரிய நீர்க்கழிகளையுடைய கடற்கரை நாடனே தெளிவுபட ஆராயும் அறிவிலாரையும் கூடியபின் பிரிவதென்ருல் பெரிய பிரிவுத் துன்ப நோய் வருத்தும். எனவே, எவரிடமும் கூடாதிருப்பது கோடிநன்மையாகும். - * 168 & நல்ல நூலைக் கற்காது விணுகிய நாளும், பெரியோரிடம் சென்று பழகாதொழிந்த நாளும்,இயன்றவற்றைப் பிறர்க்கு உதவாது கழிந்த நாளும், சொல்லப்போல்ை, நல்ல பண்பாளரிடம் காணப்படா. 169 பெரியவர்கட்குப் பெருமை பணிவு. உயர்ந்த பொருள் ஒன்றிற்கு உரியவரின் உண்மையான உரிமை அடக்கமே. ஆராயுங்கால், செல்வம் பெற்றவரும், தம்மை அண்டின வரது வறுமைத் துயரை நீக்குவார் எனில் -ಜಜಣ್ಣ - 1 செல்வராவர்.