பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அரசிய 18. நல்லார் கூட்டுறவை நாடுதல் வெயில் ஏறியதும் புல்லில் இருந்த பணி விட்டுநீங்கிருற் போல, அறியாப்பருவத்திலே அடங்காத தியவருடன் கூடி முறையற்ற செயல் புரிந்துவந்த தியொழுக்கம், முறை யறிந்த நல்லினத்தோடு சேர்ந்து பழக விலகிவிடும். 171 நல்லறவழியை நாடியறிக. எமனுக்கு அஞ்சித் திவினை செய்யற்க. பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்க. வஞ்சகக் குணம் வராது த டு க் க. திவினை செய்வாரது தொடர்பை வெறுத்திடுக பெரியோர் வாய்மொழியை என்றும் பெற்றுப் பின்பற்றுக. 172 கூடியவரைப் பிரிதலும் கொடிய பிணியும் சாவும் உடம்பு பெற்றவர்க்கு உடனுக்குடன் உண்டாவதால், ஆராயத் தொடங்கிப் பிறவி கொடியதுஎன்று உணரவல்ல பேரறிவாளரை எ ன் ம ன ம், அம்மாடி! மிகவும் சேர்வதாகுக. 173 மிகவும் எண்ணிப் பார்க்கின், பிறவி துன்பமானது என்ருலும், இந்தப் பிறவியில் பண்பு மிக்க உள்ளமுடைய பெரியார்களோடு என்றும் நட்புகொண்டு கூடியிருக்கப் பெறின், பிறவியை எவரும் வெறுக்கார். 174 ஊரிலுள்ள கழிவுநீர் வேருெரு பெரிய துய நீரோட்ட இடத்தை அடைந்தபோது, கழிவு நீர் என்ற இழிந்த பேரும் நீங்கி, துய தெய்வ நீர் எனப்படும். குடிப்பெருமை யில்லாத கீழோரும், நன்மாண்புடைய நல்லோரைச் சேர்ந்தால், மலைபோல் பெருமையால் உயர் ந் து தோன்றுவர். உணர்வீராக ! . . 175