பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அரசியல் நல்லுணர்வாளர் செயல் முடிக்கும் வரையும் தம் அறிவுத்திறமையை வெளியாக்காது உள்ளடக்கி, தம் மன ஊக்கத்தையும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். பிறரது ஊக்கத்தை அவரது உறுப்புக்களின் குறிப் பினலேயே ஆராய்ந்தறியும் அறிவுடையவரின் நோக்கத் தின்படி உலகம் நடக்கும். 196 செல்லால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை மற்ற அதன் விழுதுகள் தூண்களாய் நின்று தாங்கிக் காப்பது போல, தந்தையிடம் தளர்ச்சி காணப்படின், அது, அவன் பெற்ற மைந்தன் முயன்று உழைத்து மறைக்க நீங்கும். 197 யானையின் புள்ளி பெர்ருந்திய முகத்தைப் புண்படுத்தக் கூடிய கூரிய நகங்களையும் வலிய கால்களையும் உடைய அரிமா (சிங்கம்) போன்ற வலிமை (உறுதி) உடைய வர்கள், இல்லறத்தில் இருந்துகொண்டு தாழ்வுபட ஒரு பொருளும் இல்லாமல் வறுமையால் இறப்பதாயினும், பெருமை குன்றி இழிவுதரும் செயல் செய்வரோ ? 198 இனிய கரும்பு ஈன்ற திரண்ட காலோடும் பிடரி மயிர் போன்ற சோலையோடுங் கூடியதான கருப்பம் பூ, தேன் போல் மணக்கும் மணத்தை இழந்தாற்போல, தமது புகழ்ப் பெயரைப் பொறித்து நிலைநாட்டும் பெரிய ஆண்மைக்குரிய முயற்சிகளை ஒருவர் செய்யாதபோது, உயர்ந்த குடியில் பிறந்ததல்ை என்ன பயன் ? 199 பெரிய முத்தரைய மன்னர் போன்ற செல்வர்கள் மிகவும் மகிழ்ந்து அளிக்கும் பொரியல் வகையோடு கூடிய விருந்துணவை அற்பர்களே ஆர்வத்துடன் உண்பர். பொரியல்களின் பேரும் அறியாத உழைப்பாளர் மிகவும் விரும்புதற்குரிய தமது உழைப்பால் பெற்ற நீருணவும் (நீராகாரமும்) அமிழ்தமாகும். 200