பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 நட்பியல் பொன் கலத்தில் இட்ட - புலிநகம் போன்ற வெண்மை யான சோற்றைச் சர்க்கரையோடும் பாலோடும், உள்ளன் பில்லாதவர் கையிலிருந்து பெற்று உண்பதைக் காட்டிலும், உப்பில்லாத புல்லரிசிக் கஞ்சியை உயிர்போன்ற உண்மை உறவினரிடத்திலிருந்து எந்தக் கலத்தில் (பாத்திரத்தில்) பெற்று உண்டாலும் இனிக்கும். ". 206 தம்மொடு பொருந்தாதவரது வீட்டில் விருந்தோம்பலாக விருப்பத்திற்குரிய பொரியல்களோடு கூடிய சிறப்புணவு நேரத்தோடு கிடைக்கப்பெற்ருலும் அது வேப்பங்காயாகும். மேலும் கேட்பாயாக ! நேரங்கெட்ட நேரத்தில் கீரையுணவு இட்டாலும் தம்மைச் சேர்ந்தவரிடத்திலிருந்து கிடைப்பது இனிக்கும். - 207 நாடோறும் சலிக்காது சம்மட்டியைப் போல அதட்டி மிரட்டி உண்டுவந்தவரும், பொருளை நெருப்பில் இட்டு நீங்கிவிடும் குறடுபோல் துன்பக் காலத்தில் நீங்கிவிடுவர். உண்மை நண்பர் எனப்படுவார், பொருளோடு நெருப்பிலே நிற்கும் உலேயாணிக்கோல்போல, நண்பருடன் தாமும் நெருப்பொத்த துன்பத்துள் தோய்ந்திருப்பர். 208 மணம் மிக்க குளிர்ந்த மலர்மாலை உடையவளே ! நண்பர்க்கு நண்பர் இறுதிவரையும் இன்புறவேண்டிய வற்றுள் எழுச்சிகொண்டு இன்புற்று அவருடன் துன்புற வேண்டியவற்றுள் துன்புருவிடின், மறுவுலகத்திற்காகச் செய்யத்தக்க நற் செயல் வேருென்று உளதோ? 209 விரும்பாதவர் வீட்டில் வேறுபட அமர்ந்து உண்கிற - பூனேக்கண்போல் பளபளக்கும் விருப்பத்திற்குரிய கறிக ளோடு கூடிய சிறப்புணவும் வேப்பங்காய் போன்றதாம். விருப்பமுடைய தம்மொத்தவரது வீட்டிலே பெற்ற தெளிந்த குளிர்ந்த புல்லரிசி நீர்க்கஞ்சி, எலும்பையும் உயிர்ப்பிப்பதற்கேற்ற அமிழ்தமாம். 210