பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 94 22. நட்பாராய்தல் கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே;-குருத்திற்கு). எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. 211 இற்பிறப் பெண்ணி இடைதிரியார் என்பதோர் நற்புடை கொண்டமை அல்லது-பொற்கேழ் புனல்ஒழுகப் புள் இரியும் பூங்குன்ற நாட! மனம் அறியப் பட்டதொன் றன்று. 212 யானை அனையவர் நண்பொரீஇ நாயனயார் கேண்மை தழிஇக் கொளல்வேண்டும்!-யானே அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்த . வேல் மெய்யதா வால்குழைக்கும் காய். 2.13 பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில் 'சிலநாளும் ஒட்டாரோ ட்ொட்டார்;-பலநாளும் நீத்தார் எனக்கை விடல்உண்டோ தம்நெஞ்சத்(து) யாத்தாரோ டியாத்த தொடர்பு. 214 கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்பு வாரை நயப்பாரும் கட்பாரும் இல். - 215