பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 நட்பியல் 22. ஆராய்ந்து நட்பு கொள்ளுதல் பொருளுணர்ந்து கற்றுத் தெளிந்த நல்லோர் நட்பு, கரும்பை நுனிக்குருத்திலிருந்து அடிநோக்கித் தின்பது போல் வர வர என்றும் இனிக்கும். என்றும் இனிய பண்பு இல்லாதவரது நட்போ, குருத்திற்கு எதிரிலிருந்து . அதாவது, அடியிலிருந்து நுனி நோக்கித் தின்பதுபோல் வரவர இனிமை குன்றும். - 211 (பொன் கொழித்துப்) பொன்னிறத்துடன் அருவி ஒட (அந்த ஒலி கேட்டுப்) பறவைகள் பறந்தோடும் பொலிவு மிக்க மலைநாடன்ே ! ஒருவரது உயர்குடிப் பிறப்பை எண்ணி, அவர் நடுவிலே மாறுபடமாட்டார் என்ற ஒரு நற்காரணத்தால் நட்புகொள்வது தவிர, மற்றபடி,ஒருவரது உள்மனம்உண்மையாய்அறியப்படக்கூடிய ஒன்றன்று.212 யானை போன்றவரது நட்பை விலக்கி நாய் போன்ற வரது நட்பைப் பொருந்திக் கொள்ளவேண்டும். ஏனெனில், யானையானது பலநாள் அறிந்து பழகியும் பாகனையே கொல்வதுண்டு. நாயோ, (தனது தலைவன் தன்மேல்) எறிந்த வேல் உடம்பில்ே பாய்ந்திருக்கவும் வாலேக் குழைத்து அன்புகாட்டும். - 213 பலநாளும் பக்கத்திலேயிருந்து பழகினலும் சிலநாளா வது மனத்தோடு பொருத்தப்படாதவரோடு பெரியோர் பொருந்தார். தம் மனத்தோடு பொருந்தியவரோடு பெருந்திய நட்பை, அவர் பலநாளாய்ப் பிரிந்திருக்கிருர்என் பதற்காகப் பெரியோர் கைவிடுதல் உண்டோ? (இல்லை) 214 மரக்கிளையில் நிலையாக மலர்ந்திருக்கும் பூக்களைப்போல, பிறகு குன்ருது என்றுமே அகம் மலர்ந்து நட்புகொண் டது நட்புகொண்டதாகவே இருப்பதுதான் உண்மையான நட்பு ஆளுதலாகும். தோண்டப்பட்ட குளத்திலே உள்ள தாமரை முதலிய மலர்களைப்போல முதலில் நட்பு மலர்ந்து பிறகு குன்றிவிடுபவரை விரும்புபவரும் நண்பராய்க் கொள் பவரும் இல்லை. 215