பக்கம்:நாலும் இரண்டும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் கோடு என்று இல்லதைப் பற்றி ஏமாற்றமுற்று அழிவதே பேதைமையாகும். இச்செயலுக்குக் கல்லாதவனயினும் ஒருவேளை மன்னிப்பினைப் பெறலாம். எல்லாவற்றையும் கற்று இப்படி உற்றது உணராது ஒழியும் பேதைக்கு உய்தி உண்டோ? எனவேதான் பேதைமை யென்ப தொன்று என்று சொல்லி ஒன்று என்ற சொல்லான் அதன் கொடுமைக்கு அதுவே நிகர்; வேறு ஒன்று கிடையாது எனச் சுட்டிக் காட்டி விட்டார். இதற்கு உரை கூற வந்த பரிமேலழகர், ஒருவனுக்கு ஏனேக் குற்றங்கள் எல்லாவற்றி லும் மிக்கது' என விளக்கி, இதன் கொடுமையின் உச்ச நிலையினை விளக்குகிரு.ர். இப்படி இப்படி வாழ்ந்தால் தாமும் இன்புற்று வையத் தையும் வாழ வைக்கலாம் என்ற வாய்மொழிகளை யெல்லாம் நன்கு கற்றும், ஏதங் கொண்டு ஊதியம் போக விடும் - கேடு பயப்பனவற்றைக் கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடும் கொடுமையை எண்ணி எண்ணி கைந்த வள்ளுவர் உள்ளம் இந்தக் குறளே முதலில் உலகர்முன் வைக்கிறது. இதைத் தொடர்ந்து இப்பேதைமையின் இயல்பு, நிலை. செயல், பயன் ஆகியவற்றைச் சொல்லிக் கொண்டே செல் கிருர் வள்ளுவர். கல்லாதவரையோ பிறரையோ பேதை என்று வள்ளுவர் கருதவில்லை; உண்மையும் அதுதான். ஆனல் வள்ளுவர் போன்ருர் சொல்லியவற்றை யெல்லாம் கற்றும் பிறர்க்கு உரைத்தும் தாம் அடங்கா அற்பர்களையே வள்ளுவர் பெரும் பேதை என்கிருர். எனவே உலகம் செம்மை நெறியில் செல்ல வேண்டுமானல் எல்லாக் கொடுமைகளுக்கும் காரணமான இந்தப் பேதைமை - 50